சாம்பியன்ஸ் டிராபி: ரிஷப் பண்ட் காயம்! அதிரடி வீரருக்கு அதிர்ஷ்டம்! இந்தியாவின் பிளேயிங் லெவன்!

Published : Feb 17, 2025, 05:33 PM IST

சாம்பியன்ஸ் டிராபியில் காயம் காரணமாக ரிஷப் பண்ட் விளையாடுவதில் சிக்கல் எழுந்துள்ளது. இதனால் மற்றொரு அதிரடி வீரருக்கு அதிர்ஷ்டம் கிட்டியுள்ளது.

PREV
14
சாம்பியன்ஸ் டிராபி: ரிஷப் பண்ட் காயம்! அதிரடி வீரருக்கு அதிர்ஷ்டம்! இந்தியாவின் பிளேயிங் லெவன்!
சாம்பியன்ஸ் டிராபி: ரிஷப் பண்ட் காயம்! அதிரடி வீரருக்கு அதிர்ஷ்டம்! இந்தியாவின் பிளேயிங் லெவன்!

'மினி உலகக்கோப்பை' எனப்படும் சாம்பியன்ஸ் டிராபி தொடர் பிப்ரவரி 19ம் தேதி (நாளை மறுநாள்)  முதல் மார்ச் மாதம் 9ம் தேதி வரை பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற உள்ளது. இந்த தொடரை பாகிஸ்தான் நடத்தும் நிலையில் இந்தியா அங்கு செல்ல மறுத்து விட்டதால் இந்திய அணி விளையாடும் போட்டிகள் அனைத்தும் துபாயில் நடைபெறும். 

சாம்பியன்ஸ் தொடரில் பங்கேற்பதற்காக ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி வீரர்கள் துபாய் சென்றடைந்தனர். துபாய் மைதானத்தில் இந்திய அணி வீரர்கள் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டனர். அப்போது இந்திய வீரர் ஹர்திக் பாண்ட்யா அடித்த பந்து ரிஷப் பண்ட்டின் காலில் வேகமாக தாக்கியதில் அவர் சுருண்டு விழுந்தார். உடனடியாக இந்திய அணியின் மருத்துவக் குழுவினர் ஐஸ் கட்டிகளை வைத்து அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். 
 

24
சாம்பியன்ஸ் டிராபி 2025

இதனால் பெவிலியனுக்கு சென்ற ரிஷப் பண்ட் மீண்டும் திரும்பி வந்து பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டார். ஆனால் அப்போதும் அவரால் சரிவர பேட்டிங் செய்ய முடியவில்லை. இதனல் ரிஷப் பண்ட் சாம்பியன்ஸ் டிராபியில் விளையாடுவதில் சிக்கல் எழுந்துள்ளது. இதனால் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் ரிஷப் பண்ட்டுக்கு பதிலாக கே.எல்.ராகுல் விளையாடுவார் என தகவல் எழுந்துள்ளது. 

தொடக்க வீரர்களாக சுப்மன் கில், ரோகித் சர்மா களமிறங்க இருக்கின்றனர். விராட் கோலி ஒன்டவுனிலும், ஸ்ரேயேஸ் ஐயர் அதற்கு அடுத்த இடத்தில் களமிறங்க உள்ளனர். மிடில் வரிசையில் கே.எல்.ராகுல், ஹர்திக் பாண்ட்யா மற்றும் ரவீந்திர ஜடேஜா பலம் சேர்க்க இருக்கின்றனர். பின்வரிசையில் வாஷிங்டன் சுந்தர் பேட்டிங் துறையை மேம்படுத்த உள்ளார்.

சாம்பியன்ஸ் டிராபி: இந்திய தேசியக் கொடியை புறக்கணித்த பாகிஸ்தான்! வலுக்கும் கண்டனம்!

34
இந்திய அணியின் பிளேயிங் லெவன்

ஸ்பின் பவுலலிங்கை பொறுத்தவரை வருண் சக்கரவர்த்தி அல்லது குல்தீப் யாதவ் என யாராவது ஒருவர் இடம்பெறுவார்கள். பாஸ்ட் பவுலிங்கில் முகமது ஷமி மற்றும் அர்ஷ்தீப் சிங் விளையாடுகின்றனர். சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியின் உத்தேச பிளேயிங் லெவன்: ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில் (துணை கேப்டன்), விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ் அல்லது  வருண் சகரவர்த்தி, முகமது. ஷமி மற்றும் அர்ஷ்தீப் சிங்.

44
இந்தியா-பாகிஸ்தான் மேட்ச்

சாம்பியன்ஸ் டிராபி தொடங்கும் பிப்ரவரி 19ம் தேதி நியூசிலாந்தும், பாகிஸ்தான் அணிகளும் மோதுகின்றன. இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் பிப்ரவரி 20ம் தேதி நியூசிலாந்து அணியை எதிர்கொள்ள உள்ளது. உலக கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்தியா-பாகிஸ்தான் போட்டி பிப்ரவரி 23ம் தேதி நடைபெறுகிறது. 

மார்ச் 4 ம்தேதி முதல் அரையிறுதி போட்டி நடக்கிறது. மார்ச் 5ம் தேதி 2வது அரையிறுதி போட்டி நடக்கிறது. மார்ச் 9ம் தேதி இறுதிப்போட்டி நடைபெற உள்ளது. இந்த தொடரில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய 8 அணிகள் பங்கேற்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

சாம்பியன்ஸ் டிராபியில் மறக்க முடியாத 5 போட்டிகள்! அனல் பறந்த இந்தியா-பாகிஸ்தான் மேட்ச்!

Read more Photos on
click me!

Recommended Stories