Sean Williams in Rehab Over Drug Addiction: போதையின் பிடியில் சிக்கிய ஜிம்பாப்வே கிரிக்கெட் வீரர் சீன் வில்லியம்ஸ், தானாகவே அணியில் இருந்து விலகி போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளார்.
ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் மூத்த பேட்ஸ்மேன் சீன் வில்லியம்ஸ், ஹராரேயில் நடைபெறவிருந்த ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கோப்பை ஆப்பிரிக்கா தகுதிச் சுற்று போட்டியில் இருந்து சமீபத்தில் விலகினார். ஊக்கமருந்து சோதனைக்கு உட்பட நேரிடும் என்பதால், அவர் தேசிய அணித் தேர்வுக்கு வரவில்லை.
அவர் விலகியதற்கான காரணங்களை அறிய நடத்தப்பட்ட உள் விசாரணையின் போது, வில்லியம்ஸ் தான் போதைப்பொருள் பழக்கத்துடன் போராடி வருவதாகவும், தானாக முன்வந்து மறுவாழ்வு மையத்தில் சேர்ந்துள்ளதாகவும் அதிரடியாக தெரிவித்துள்ளார்.
24
இனி அணியில் இடம் இல்லை
சீன் வில்லியம்ஸ் இனி தேசிய அணித் தேர்வுக்குக் கருதப்பட மாட்டார். மேலும் அவரது மத்திய ஒப்பந்தமும் புதுப்பிக்கப்படாது என்று ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. "ஒப்பந்தம் செய்யப்பட்ட அனைத்து வீரர்களும் தொழில்முறை, ஒழுக்கம் மற்றும் அணி நெறிமுறைகள் மற்றும் ஊக்கமருந்து எதிர்ப்பு விதிமுறைகளுக்கு இணங்க வேண்டும் என்று ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியம் கூறியுள்ளது.
34
ஜிம்பாப்வே அணிக்காக சாதனை
சீன் வில்லியம்ஸ் 2005-ல் அறிமுகமானதிலிருந்து ஜிம்பாப்வேக்காக அனைத்து வடிவங்களிலும் 8,000 ரன்களுக்கு மேல் குவித்துள்ளார். அவர் ஒருநாள் போட்டிகளில் 37.53 சராசரியுடன் 5,217 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 8 சதங்கள் மற்றும் 37 அரை சதங்கள் அடங்கும். இந்த ஆண்டின் தொடக்கத்தில், இங்கிலாந்தின் புகழ்பெற்ற வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சனை முந்தி, நீண்ட காலம் பணியாற்றும் சர்வதேச கிரிக்கெட் வீரர் ஆனார்.
"கடந்த இரண்டு தசாப்தங்களாக ஜிம்பாப்வே கிரிக்கெட்டுக்கு வில்லியம்ஸ் ஆற்றிய மகத்தான பங்களிப்பை ZC மனதார ஏற்றுக்கொண்டு பாராட்டுகிறது. எங்கள் சமீபத்திய வரலாற்றில் மிக முக்கியமான சில தருணங்களில் வில்லியம்ஸ் ஒரு முக்கிய பங்கைக் கொண்டிருந்தார், களத்திலும் வெளியேயும் ஒரு நீடித்த பாரம்பரியத்தை விட்டுச் சென்றுள்ளார். அவர் குணமடைய விரும்புகிறோம்.
மேலும் அவரது எதிர்கால முயற்சிகளில் வெற்றி பெற வாழ்த்துகிறோம்" என்று ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. 2014-ல், ஒரு பயிற்சி முகாமில் ஏற்பட்ட ஒழுங்குமுறை சிக்கல்கள் காரணமாக, வில்லியம்ஸ் பங்களாதேஷ் சுற்றுப்பயணத்தில் இருந்து நிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.