வேற லெவல் பிளேயர்ங்க அவன்; எப்பேர்ப்பட்ட பவுலருக்கும் சிம்மசொப்பனம்..! இந்திய வீரருக்கு ஜாகீர் கான் புகழாரம்

First Published Dec 7, 2020, 9:23 PM IST

இந்திய அணியின் அதிரடி ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்டியாவை ஜாகீர் கான் வெகுவாக புகழ்ந்து பேசியுள்ளார்.

இந்திய அணியின் ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்டியா, அணியில் அறிமுன சிறிது காலத்திலேயே ஆல்டைம் லெஜண்ட் ஆல்ரவுண்டர்களில் ஒருவரான கபில் தேவுடன் ஒப்பிடப்பட்டார். ஆனால் பின்னர் சில சொதப்பல்களால் விமர்சனத்துக்கும் வசைக்கும் ஆளான ஹர்திக் பாண்டியா, ஐபிஎல் மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டிகளிலும் அபாரமாக ஆடி தனது ஃபினிஷிங் ரோலை செவ்வனே செய்துவருகிறார்.
undefined
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது டி20 போட்டியில் கடைசி 2 ஓவரில் இருபத்தைந்து ரன்களை அடித்து இந்திய அணிக்கு வெற்றியை தேடிக்கொடுத்தார் ஹர்திக் பாண்டியா. 22 பந்தில் 42 ரன்களை விளாசி ஆட்டநாயகன் விருதையும் வென்றார். பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் ஆகிய அனைத்துவகையிலும் பங்களிப்பு செய்யக்கூடியவர் ஹர்திக் பாண்டியா.
undefined
இந்நிலையில், ஹர்திக் பாண்டியா குறித்து பேசியுள்ள ஜாகீர் கான், ஹர்திக் பாண்டியா எப்போதுமே ரிலாக்ஸாகவே இருக்கிறார். சில பந்துகளில் ரன் அடிக்காமல் கடத்தினாலும், தன் மீதான நம்பிக்கையால் விரக்தியோ வெறுப்போ ஆகமாட்டார். எந்த சூழலிலும் சிக்ஸர்களை விளாசக்கூடியவர் என்பதால், பவுலர் தனக்கான பந்தை வீசும்வரை காத்திருந்து அடித்து நொறுக்கிவிடுவார். ஹர்திக் பாண்டியா அடிக்கும் அடியில் பவுலர்களுக்கு தானாக அழுத்தம் அதிகரித்துவிடும். ஹர்திக் பாண்டியா மாதிரியான ஒரு வீரர் க்ரீஸில் நின்றால் அது எப்பேர்ப்பட்ட பவுலருக்கும் நெருக்கடி மட்டுமல்லாது அவரை டீல் செய்வதும் கடினம். அவர் இந்திய அணியின் மிகப்பெரிய சொத்து என்று ஜாகீர் கான் புகழாரம் சூட்டியுள்ளார்.
undefined
click me!