யுஸ்வேந்திர சாஹல், தனஸ்ரீ வர்மா விவாகரத்து: ஐபிஎல் 2025 தொடங்குவதற்கு முன், யுஸ்வேந்திர சாஹல் மற்றும் தனஸ்ரீ வர்மாவின் விவாகரத்து உறுதியாகிவிடும் என்று கூறப்படுகிறது. மும்பை உயர் நீதிமன்றம், சாஹல் மற்றும் தனஸ்ரீ வர்மா விவாகரத்து வழக்கில் 6 மாத கால அவகாசத்தை ரத்து செய்துள்ளது. மேலும், மார்ச் 20க்குள் விவாகரத்து மனு மீது முடிவெடுக்க குடும்ப நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டுள்ளது.
Dhanashree Verma Divorce, Divorce Alimony
யுஸ்வேந்திர சாஹல், தனஸ்ரீக்கு ஜீவனாம்சமாக 4.75 கோடி ரூபாய் கொடுப்பார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. 2022 முதல் சாஹல் மற்றும்தனஸ்ரீ வர்மா இருவரும் பிரிந்து வாழ்கின்றனர்: யுஸ்வேந்திர சாஹல் மற்றும் தனஸ்ரீ வர்மா டிசம்பர் 2020-ல் திருமணம் செய்து கொண்டனர்.
Dhanashree Verma Yuzvendra Chahal RJ Mahvash
2 ஆண்டுகள் திருமண வாழ்க்கைக்கு பிறகு ஜூன் 2022 முதல் இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். இருவரும் கடந்த பிப்ரவரி 5-ம் தேதி மும்பை குடும்ப நீதிமன்றத்தில் விவாகரத்து மனு தாக்கல் செய்தனர். 6 மாத கால அவகாசத்தை ரத்து செய்யக்கோரி மனு தாக்கல் செய்தனர். பிப்ரவரி 20-ம் தேதி அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
Yuzvendra Chahal Divorce Alimony
ஆனால், உயர் நீதிமன்றம் தலையிட்டு மார்ச் 20, 2025-க்குள் விவாகரத்து முடிவுக்கு வர வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. 60 கோடி இல்லை, சாஹல் கொடுக்கும் ஜீவனாம்சம் இவ்வளவுதான்: தனஸ்ரீ வர்மா மற்றும் யுஸ்வேந்திர சாஹல் விவாகரத்தை விட, ஜீவனாம்சம் குறித்து பலரும் ஆர்வமாக உள்ளனர். சாஹல் 60 கோடி ரூபாய் ஜீவனாம்சம் கொடுப்பதாக சில ஊடகங்களில் தகவல் வெளியானது.
Chahal and RJ Mahvash
ஆனால், தனஸ்ரீ வர்மா குடும்பத்தினர் அதை மறுத்தனர். தற்போது கிடைத்த தகவலின்படி, சாஹல் தனஸ்ரீ வர்மாவுக்கு 4.75 கோடி ரூபாய் ஜீவனாம்சம் கொடுப்பார். அதில் 2.37 கோடி ரூபாய் ஏற்கனவே கொடுக்கப்பட்டுள்ளது. மீதி தொகை விவாகரத்து முடிவுக்கு வந்த பிறகு கொடுக்கப்படும்.
Yuzvendra Chahal Divorce, Dhanashree Verma Divorce
சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் வேறொரு பெண்ணுடன் சாஹல்: தனஸ்ரீ வர்மா மற்றும் யுஸ்வேந்திர சாஹல் விவாகரத்து செய்தி கடந்த சில நாட்களாக வைரலாகி வருகிறது. சமீபத்தில் துபாயில் நடந்த சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் சாஹல் ஆர்.ஜே. மஹவஷுடன் காணப்பட்டார். இருவரும் ஒன்றாக அமர்ந்திருந்தனர். இதுகுறித்து தனஸ்ரீ வர்மா ஒரு பதிவை வெளியிட்டார். அதில் பெண்களை குறை சொல்வது ஒரு ஃபேஷனாக இருக்கிறது என்று குறிப்பிட்டிருந்தார்.
Yuzvendra Chahal, Dhanashree Verma
இந்த நிலையில் தான் சாஹல் மற்றும் தனஸ்ரீ வர்மா விவாகரத்து இப்போது முடிவுக்கு வர இருக்கிறது. ஏற்கனவே கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா மற்றும் நடாசா ஸ்டான்கோவிச் இருவரும் பிரிவதாக சமூக வலைதளங்கள் மூலமாக அறிவித்து பிரிந்து சென்றனர். அவர்களைத் தொடர்ந்து இப்போது மற்றொரு கிரிக்கெட் வீரர் யுஸ்வேந்திர சாஹல் மற்றும் தனஸ்ரீ வர்மா இருவரும் பிரிந்துள்ளனர்.