ஏப்ரல் 6ல் ஐபிஎல் KKR vs LSG போட்டி நடைபெறுவதில் சிக்கல்; போதுமான போலீஸ் பாதுகாப்பு வசதி இல்லையா?

Published : Mar 19, 2025, 04:45 PM IST

IPL 2025, KKR vs LSG Match Likely to Reschedule: ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி முக்கியத்துவம் பெற்றுள்ளது. ஆனால், ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதனால் போட்டி தேதி மாற்றி வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

PREV
15
ஏப்ரல் 6ல் ஐபிஎல் KKR vs LSG போட்டி நடைபெறுவதில் சிக்கல்; போதுமான போலீஸ் பாதுகாப்பு வசதி இல்லையா?

Kolkata Knight Riders vs Lucknow Super Giants: ஐபிஎல் 2025 கிரிக்கெட் திருவிழா வரும் 22 ஆம் தேதி பிரம்மாண்டமாக தொடங்குகிறது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டியில் கொல்கத்தாவின் கோட்டையான ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறுகிறது. இதே போன்று ஏப்ரல் 6ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை கொல்கத்தால் நடைபெறும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியும் நடைபெறும் என்று அறிவிக்கப்படுள்ளது.

25
Lucknow Super Giants, Rama Navami, KKR vs LSG

ஆனால், இந்த போட்டி திட்டமிட்டபடி நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதற்கு காரணம், ஏப்ரல் 6ஆம் தேதி ராம நவமி கொண்டாடப்படுகிறது. ராமர் நவமி (Ram Navami) என்பதால், பல்வேறு அமைப்புகள் கொல்கத்தா உட்பட மாநிலம் முழுவதும் பேரணி நடத்த திட்டமிட்டுள்ளன. இதனால் பாதுகாப்பு குறித்த கவலைகள் உள்ளன. எனவே அன்று ஈடன் மைதானத்தில் போட்டிக்கு பாதுகாப்பு வழங்க முடியாது என்று கொல்கத்தா காவல்துறை (Kolkata Police) தெரிவித்துள்ளது. வங்காள கிரிக்கெட் சங்க (சிஏபி) (Cricket Association of Bengal) தலைவர் சினேகாஷிஷ் கங்குலி இதனை தெரிவித்தார்.

35
Knight Riders vs Lucknow Super Giants, IPL 2025 Schedule

இதன் காரணமாக KKR vs LSG போட்டி தேதி மாற்றப்பட உள்ளது. செவ்வாய்க்கிழமை சிஏபி தலைவர் கொல்கத்தா காவல்துறையினருடன் இரண்டு முறை பேச்சுவார்த்தை நடத்தினார். ராமர் நவமி அன்று ஈடன் மைதானத்தில் KKR vs LSG போட்டிக்கு போதுமான பாதுகாப்பு ஏற்பாடு செய்ய முடியாது என்று காவல்துறையினர் திட்டவட்டமாக தெரிவித்தனர். எனவே போட்டியின் நாள் மாற உள்ளது.

45
Asianet News Tamil, Sports News Tamil

ராமர் நவமியையொட்டி நகரில் பாதுகாப்பு அதிகரிப்பு

சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி (Suvendu Adhikari), இந்த ஆண்டு ராமர் நவமியையொட்டி மாநிலம் முழுவதும் 20,000 ஊர்வலங்கள் நடைபெறும் என்றும், ஒரு கோடி இந்துக்கள் பங்கேற்பார்கள் என்றும் அறிவித்துள்ளார். கடந்த காலங்களில் ராமர் நவமி அன்று மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் விரும்பத்தகாத சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. அதை தவிர்க்க காவல்துறை நிர்வாகம் தீவிரமாக உள்ளது. கேகேஆர்-எல்எஸ்ஜி அணியில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த வீரர்கள் மற்றும் ஆதரவு ஊழியர்கள் உள்ளனர். அவர்களின் பாதுகாப்பு மற்றும் பார்வையாளர்களின் பாதுகாப்பு முக்கியமானது. இதனால் கொல்கத்தா காவல்துறை எந்தவித ஆபத்தும் எடுக்க விரும்பவில்லை.

55
Snehasish Ganguly, Cricket Association of Bengal, Rama Navami in 2025

கடந்த முறை நடந்தது போல் நடக்குமா?

சிஏபி தலைவர் கூறுகையில், ‘போதுமான பாதுகாப்பு வழங்க முடியாது என்று கொல்கத்தா காவல்துறை திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. போலீஸ் பாதுகாப்பு இல்லையென்றால், 65,000 பார்வையாளர்களை சமாளிப்பது சாத்தியமில்லை. இது குறித்து பிசிசிஐ-க்கு தெரிவித்துள்ளோம். ஆனால் இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. கடந்த ஆண்டும் ராமர் நவமி அன்று திட்டமிடப்பட்ட ஐபிஎல் போட்டியின் தேதி மாற்றப்பட்டது.’ சிஏபி தலைவரின் கூற்றிலிருந்து ஏப்ரல் 6-ம் தேதி கேகேஆர்-எல்எஸ்ஜி போட்டி நடைபெறாது என்பது தெளிவாகிறது.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories