WTC 2025: தென்னாப்பிரிக்காவுக்கு இத்தனை கோடிகள் பரிசா? ஆஸ்திரேலியா, இந்தியாவுக்கு எவ்வளவு?

Published : Jun 14, 2025, 09:29 PM IST

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் தென்னாப்பிரிக்கா வெற்றி வாகை சூடிய நிலையில், அந்த அணிக்கு எவ்வளவு பரிசுத்தொகை கிடைக்கும்?, ஆஸ்திரேலியா, இந்தியாவுக்கு எவ்வளவு கிடைக்கும்? என பார்க்கலாம்.

PREV
15
WTC 2023-25 Prize Money

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி ஆஸ்திரேலியாவை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி கோப்பையை வென்று அசத்தியுள்ளது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்சில் 212 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. தென்னாப்பிரிக்கா அணி தனது முதல் இன்னிங்சில் வெறும் 138 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

25
உலக டெஸ்ட் சாம்பியன் தென்னாப்பிரிக்கா

இதனால் 74 ரன்கள் முன்னிலையுடன் ஆஸ்திரேலிய அணி தனது 2வது இன்னிங்சில் 207 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால் 282 ரன்கள் என்ற சவாலான இலக்கை துரத்திய தென்னாப்பிரிக்கா அணி 5 விக்கெட் இழப்பிற்கு 282 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. 

தொடக்க வீரர் எய்டன் மார்க்ரம் அதிரடி சதம் (136 ரன்கள்) விளாசினார். கேப்டன் டெம்பா பவுமா 66 ரன்கள் அடித்தார். இந்த வெற்றியின் மூலம் தென்னாப்பிரிக்கா அணி 27 ஆண்டுகளுக்கு பிறகு ஐசிசி கோப்பையை வென்று அசத்தியுள்ளது.

35
தென்னாப்பிரிக்கா அணிக்கு எவ்வளவு பரிசு?

2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை வென்ற தென்னாப்பிரிக்கா அணி 3,600,000 அமெரிக்க டாலர்களை (தோராயமாக 31,05,11,700 இந்திய ரூபாய்) பரிசுத்தொகையாக பெற்றுள்ளது. இது 2021 மற்றும் 2023 இறுதிப் போட்டிகளில் வெற்றியாளர்கள் பெற்ற 1,600,000 அமெரிக்க டாலர்களை விட கணிசமான அதிகரிப்பு ஆகும். 

இரண்டாம் இடத்தைப் பிடித்த ஆஸ்திரேலியா, 2,160,000 அமெரிக்க டாலர்களை (தோராயமாக 18,63,07,020 இந்திய ரூபாய்) பரிசுத்தொகையை பெற்றுள்ளது. இரண்டாம் இடத்தைப் பிடித்த அணி முந்தைய பதிப்புகளில் 800,000 அமெரிக்க டாலர்களை பெற்றிருந்தது.

45
இந்தியாவுக்கு எவ்வளவு கிடைக்கும்?

மூன்றாவது இடத்தைப் பிடித்ததற்காக இந்தியா 1,440,000 அமெரிக்க டாலர்களை (12,42,04,680 இந்திய ரூபாய்) பரிசுத்தொகையாக பெற்றுள்ளது. அப்போது மூன்றாவது இடத்தில் இருந்த தென்னாப்பிரிக்கா 450,000 அமெரிக்க டாலர்களை வென்றிருந்தது. நான்காவது இடத்தைப் பிடித்த நியூசிலாந்து 1,200,000 அமெரிக்க டாலர்களை (தோராயமாக 10,35,03,900 இந்திய ரூபாய்) வென்றது.

55
WTC 2023-25 ​​இல் ஒவ்வொரு அணியும் வென்ற பரிசுத் தொகையின் முழுப் பட்டியல்

வெற்றியாளர் - 3,600,000 டாலர் (தோராயமாக 31,05,11,700 இந்திய ரூபாய்) - தென்னாப்பிரிக்கா

இரண்டாவது இடம் - 2,160,000 டாலர் (18,63,07,020 இந்திய ரூபாய்) - ஆஸ்திரேலியா

மூன்றாவது இடம் - 1,440,000 டாலர் (12,42,04,680 இந்திய ரூபாய்) - இந்தியா

நான்காவது இடம் - 1,200,000 டாலர் (10,35,03,900 இந்திய ரூபாய்) - நியூசிலாந்து

ஐந்தாவது இடம் - 960,000 டாலர் (8,28,03,120 இந்திய ரூபாய்) - இங்கிலாந்து

ஆறாவது இடம் - 840,000 டாலர் (7,24,52,730 இந்திய ரூபாய்) - இலங்கை

ஏழாவது இடம் - 720,000 டாலர் (6,21,02,340 இந்திய ரூபாய்) - வங்கதேசம்

எட்டாவது இடம் - 600,000 டாலர் (5,17,51,950 இந்திய ரூபாய்) - மேற்கிந்திய தீவுகள்

ஒன்பதாவது இடம் - 480,000 டாலர் (4,14,01,560 இந்திய ரூபாய்) - பாகிஸ்தான்

Read more Photos on
click me!

Recommended Stories