WPL 2023 Auction: அதிகமான தொகைக்கு விலைபோன டாப் 10 வீராங்கனைகள்

Published : Feb 13, 2023, 08:14 PM IST

மகளிர் பிரீமியர் லீக் முதல் சீசனுக்கான ஏலம் மும்பையில் நடந்துவருகிரது. மும்பை இந்தியன்ஸ், ஆர்சிபி, குஜராத் ஜெயிண்ட்ஸ், டெல்லி கேபிடள்ஸ், யுபி வாரியர்ஸ்  ஆகிய 5 அணிகள் ஏலத்தில் கலந்துகொண்டு வீராங்கனைகளை ஏலத்தில் வாங்கினர். மொத்தம் 409 வீராங்கனைகள் ஏலத்தில் விடப்பட்டனர். இந்த ஏலத்தில் அதிகபட்ச தொகைக்கு விலைபோன டாப் 10 வீராங்கனைகளை பார்ப்போம்.  

PREV
110
WPL 2023 Auction: அதிகமான தொகைக்கு விலைபோன டாப் 10 வீராங்கனைகள்

1. ஸ்மிரிதி மந்தனா - ரூ.3.4 கோடி 

இந்திய மகளிர் அணியின் டாப் ஆர்டர் நட்சத்திர வீராங்கனை ஸ்மிரிதி மந்தனாவை ரூ.3.4 கோடி என்ற அதிகபட்ச தொகை கொடுத்து ஆர்சிபி அணி ஏலத்தில் எடுத்தது.
 

210

2. ஆஷ்லே கார்ட்னெர் - ரூ.3.2 கோடி

ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் ஆஷ்லே கார்ட்னெரை ரூ.3.2 கோடி கொடுத்து குஜராத் ஜெயிண்ட்ஸ் அணி எடுத்தது. 

310

3. நாட் ஸ்கைவர் பிரண்ட் - ரூ.3.2 கோடி

இங்கிலாந்து வீராங்கனை நாட் ஸ்கைவரும் அதே ரூ.3.2 கோடிக்கு விலைபோனார் . ஆல்ரவுண்டரான இவரை மும்பை இந்தியன்ஸ் அணி ஏலத்தில் வாங்கியது. 

WPL 2023 ஏலத்திற்கு பின் பயங்கரமா பங்கம் செய்யப்படும் பாபர் அசாம் & பாகிஸ்தான் சூப்பர் லீக்

410

4. தீப்தி ஷர்மா - ரூ.2.6 கோடி

இந்திய ஆல்ரவுண்டர் தீப்தி ஷர்மாவை ரூ.2.6 கோடி கொடுத்து யுபி வாரியர்ஸ் அணி ஏலத்தில் தட்டி தூக்கியது.
 

510

5. ஜெமிமா ரோட்ரிக்ஸ் - ரூ.2.2 கோடி

இந்திய அணியின் நட்சத்திர வீராங்கனை ஜெமிமா ரோட்ரிக்ஸை ரூ.2.2 கோடி கொடுத்து டெல்லி கேபிடள்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது. இந்திய வீராங்கனைகளில் இவர் தான் இந்திய வீராங்கனைகளில் அதிகபட்ச தொகைக்கு எடுக்கப்பட்ட 3வது வீராங்கனை ஆவார்.
 

610

6. ஷஃபாலி வெர்மா - ரூ.2 கோடி

இந்திய அணியின் இளம் அதிரடி டாப் ஆர்டர் வீராங்கனை ஷஃபாலி வெர்மா. இவரது கேப்டன்சியில் தான் இந்திய அண்டர்19 மகளிர் அணி அண்டர்19 டி20 உலக கோப்பையை வென்றது. இவரை ரூ.2 கோடி கொடுத்து டெல்லி கேபிடள்ஸ் அணி வாங்கியது.
 

710

7. பெத் மூனி - ரூ.1.9 கோடி

ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேன் பெத் மூனியை ரூ.2 கோடி கொடுத்து குஜராத் ஜெயிண்ட்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது.
 

810

8. பூஜா வஸ்ட்ராகர் - ரூ.1.9 கோடி

இந்திய வீராங்கனை பூஜா வஸ்ட்ராகரை ரூ.1.9 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கியது.

IND vs AUS: நீ எப்படியும் ஆடப்போறது இல்ல.. கிளம்பு..! இந்திய டெஸ்ட் அணியிலிருந்து விடுவிக்கப்பட்ட வீரர்

910

9. ரிச்சா கோஷ் - ரூ.1.9 கோடி 

இந்திய வீராங்கனை ரிச்சா கோஷ்க்கு ரூ.1.9 கோடி கொடுத்து ஆர்சிபி அணி வாங்கியது.
 

1010

10. ஹர்மன்ப்ரீத் கௌர் - ரூ.1.8 கோடி (மும்பை இந்தியன்ஸ்)

எலைஸ் பெர்ரி - ரூ.1.8 கோடி (ஆர்சிபி) 

இவர்கள் இருவருமே தலா ரூ.1.8 கோடிக்கு வாங்கப்பட்டனர்.
 

Read more Photos on
click me!

Recommended Stories