
கடந்த 1986 ஆம் ஆண்டு செப்டம்பர் 10 ஆம் தேதி அயர்லாந்தில் பிறந்தவர் இயன் மோர்கன். ரஷ் கிரிக்கெட் கிளப்பில் சேர்ந்து கிரிக்கெட் விளையாட கற்றுக் கொண்டார். ஒரு பேட்ஸ்மேனாகவும், ரிவர்ஸ் ஸ்வீப் அடிக்கவும் அதிகளவில் கற்றுக் கொண்டார். அயர்லாந்து அணியில் 19 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட்டில் இணைந்து விளையாடினார்.
இவர், கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு வரையில் அயர்லாந்து அணியில் இடம் பெற்று விளையாடினார். அதன் பிறகு 2009 ஆம் ஆண்டு முதல் தற்போது வரையில் இங்கிலாந்து அணியில் இடம் பெற்று விளையாடி வந்துள்ளார்.
கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் மே 27 ஆம் தேதி வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமானார். ஆனால், டெஸ்ட் போட்டிகளில் 2 ஆண்டுகள் மட்டுமே பங்கேற்று விளையாடியுள்ளார். 2012 ஆம் ஆண்டு பிப்ரவரி 3 ஆம் தேதி பாகிஸ்தான் அணிக்கு எதிராக தனது கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடினார்.
இதே போன்று 2006 ஆம் ஆண்டு ஸ்காட்லாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டியின் மூலம் அயர்லாந்து அணிக்காக விளையாடினார். கடந்த ஆண்டு ஜூன் 19 ஆம் தேதி நெதர்லாந்து அணிக்கு எதிரான தனது கடைசி ஒரு நாள் போட்டியில் விளையாடினார்.
கடந்த 2009 ஆம் ஆண்டு நெதர்லாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் அறிமுகமான இயன் மோர்கன் கடைசியாக கடந்த ஆண்டு ஜனவரி 23 ஆம் தேதி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக தனது கடைசி டி20 போட்டியில் அறிமுகமானார்.
இதுவரையில் 16 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய இயான் மோர்கன் 700 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இதே போன்று 248 ஒரு நாள் போட்டிகளில் விளையாடிய அவர், 7,701 ரன்கள் எடுத்துள்ளார். 115 சர்வதேச போட்டிகளில் விளையாடி இயான் மோர்கன் 2,458 ரன்கள் எடுத்துள்ளார். டி20 போட்டிகளில் ஒரு சதம் கூட அவர் அடிக்கவில்லை. மாறாக 14 அரை சதங்கள் வரையில் அடித்துள்ளார்.
இதே போன்று டெஸ்ட் போட்டிகளில் 2 முறை சதமும், 3 முறை அரைசமும் அடித்துள்ளார். ஒரு நாள் போட்டிகளில் மட்டும் 14 முறை சதங்கள் அடித்த இயான் மோர்கன் 47 முறை அரை சதங்கள் விளாசியுள்ளார். ஒரு நாள் போட்டிகளில் அதிகபட்சமாக 148 ரன்களும், டெஸ்ட் போட்டிகளில் 130 ரன்களும் குவித்த மோர்கன் டி20 போட்டிகளில் மட்டும் அதிகபட்சமாக 91 ரன்கள் எடுத்துள்ளார்.
கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த 50 ஓவர்கள் கொண்ட உலகக் கோப்பையை வென்று கொடுத்துள்ளார். இதே போன்று 2010 ஆண்டு டி20 உலகக் கோப்பையை வென்று கொடுத்தார். இந்த நிலையில், டெஸ்ட், ஒரு நாள் மற்றும் டி20 ஆகிய போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக இன்று அறிவித்துள்ளார்.
இது குறித்து இயான் மோர்கன் கூறியிருப்பதாவது: நான் கிரிக்கெட் விளையாடுவதற்கு உறுதுணையாக இருந்த எனது மனைவி தாரா மற்றும் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய உறவினர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொகிறேன். எனது சக வீரர்கள், பயிற்சியாளர், ரசிகர்கள், என்னை ஒரு சிறந்த வீரராக மாற்றியது மட்டுமின்றி என்னை ஒரு சிறந்த மனிதனாவும் மாற்றிய அனைவருக்கும் எனது நன்றி.
கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற நிலையில், எனது குடும்பத்தோடு நேரத்தை செலவிட இருக்கிறேன். இனிமேல் அவர்களது எதிர்காலத்திற்கு என்னால் முடிந்தவற்றை செய்வேன். கிரிக்கெட்டில் இருக்கும் சாகத்தையும், சவால்களையும் நான் கண்டிப்பாக இழப்பேன் என்று தெரிவித்துள்ளார்.
https://twitter.com/Eoin16/status/1625057182449278976?s=20&t=y8hREUPbeY-vfDHMM7yXug