சச்சினின் 100 சதங்கள் சாதனையை கோலி முறியடிப்பாரா? ஏற்கனவே டி20 கிரிக்கெட்டில் ஓய்வு - 2025 கை கொடுக்குமா?

First Published | Aug 14, 2024, 12:49 PM IST

சர்வதேச கிரிக்கெட்டில் 100 சதங்கள் அடித்த சச்சினின் சாதனையை விராட் கோலி முறியடிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. 35 வயதான கோலி, 80 சதங்களுடன் அடுத்த 20 சதங்களை எட்டுவாரா என்பது கிரிக்கெட் ரசிகர்களின் எதிர்பார்ப்பு.

Virat Kohli

சர்வதேச கிரிக்கெட்டில் 100 சதங்கள் அடித்து சாதனை படைத்தவர் கிரிக்கெட்டின் கடவுள் என்று போற்றப்படும் சச்சின் டெண்டுல்கர். 664 போட்டிகளில் விளையாடி மொத்தமாக 49 ஒருநாள் கிரிக்கெட் சதம் மற்றும் 51 டெஸ்ட் சதம் உள்பட 100 சதங்கள் உடன் 34,357 ரன்கள் குவித்துள்ளார். சச்சின் 24 ஆண்டுகள் கிரிக்கெட் வாழ்க்கையிலிருந்து ஓய்வு பெற்றவர்.

Virat Kohli-Rohit Sharma

சச்சின் டெண்டுல்கரின் இந்த சாதனையை தற்போது 35 வயதான விரா கோலி முறியடிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுவரையில் விராட் கோலி 533 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி 26,942 ரன்கள் குவித்துள்ளார். இதில், 50 ஒருநாள் கிரிக்கெட் சதம், 29 டெஸ் சதம் மற்றும் ஒரு டி20 கிரிக்கெட் சதம் உள்பட மொத்தமாக 80 சதங்கள் அடித்துள்ளார்.

Tap to resize

Kohli and Sachin Records at the Age of 35

சர்வதேச கிரிக்கெட்டில் விராட் கோலி 100 சதங்கள் எட்டுவதற்கு இன்னும் 20 சதங்கள் அடிக்க வேண்டும். தற்போது அவருக்கு 35 வயதாகும் நிலையில் ஏற்கனவே டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டார். எனினும், டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் விரைவில் அந்த 20 சதங்களை அடித்து புதிய சரித்திரம் படைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Sachin Tendulkar 100 Centuries

இதுவே சச்சின் டெண்டுல்கர் 35 வயதாக இருந்த போது என்ன சாதனைகள் படைத்தார்? விராட் கோலியின் சாதனைகளுடன் அவை எப்படி ஒப்பிடப்படுகின்றன? என்று பார்க்கலாம் வாங்க…

Virat Kohli 80 Centuries

சச்சின் டெண்டுல்கர் 35 வயதாக இருந்த போது ஒருநாள் கிரிக்கெட்டில் 16,361 ரன்கள் எடுத்திருந்தார். இதுவே கோலி 35 வயதில் 13,525 ரன்கள் எடுத்திருந்தார். ஆனால், இதில் ஆச்சரியம் என்னவென்றால் சச்சின் 407 ஒருநாள் போட்டிகளில் விளையாடி அந்த இமாலய ரன்களை குவித்திருந்தார். ஆனால், கோலி 295 இன்னிங்ஸ் விளையாடி 13,906 ரன்களை குவித்துள்ளார்.

Virat Kohli

சச்சின் தனது 16ஆவது வயதில் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் மூலமாக அறிமுகமானார். அதே போன்று கோலி 2008 ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிரான போட்டியில் அறிமுகமானார். எதிரி நாடான பாகிஸ்தானுக்கு எதிராக சச்சின் டெண்டுல்கர் அறிமுகமானா என்பது சுவாரஸ்யமாக இருந்தாலும் பாகிஸ்தானுக்கு எதிராக 64 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 2,381 ரன்கள் குவித்துள்ளார். இதில், 5 சதங்கள் அடங்கும்.

Sachin Tendulkar

இதே போன்று பாகிஸ்தானுக்கு எதிராக விராட் கோலி பன்னாட்டு போட்டிகளில் விளையாடியுள்ளார். 35 வயதாகு கோலி அவர்களுக்கு எதிராக 16 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 678 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 3 சதங்கள் அடங்கும். அதுமட்டுமின்றி ஒருநாள் போட்டிகளில் அதிகபட்ச ஸ்கோர் 183 ரன்கள் ஆகும். இது பாகிஸ்தானுக்கு எதிராக அடித்துள்ளார்.

Virat Kohli and Sachin Tendulkar

சச்சின் டெண்டுல்கரின் எல்லா சாதனைகளையும் கோலியால் முறியடிக்க முடியுமா? ஏற்கனவே ஒருநாள் போட்டிகளில் அதிக சதங்கள் (49) அடித்த சச்சினின் சாதனையை கோலி (50 சதங்கள்) முறியடித்துள்ளார். 463 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய சச்சின் 49 சதங்கள் அடித்திருந்தார். இதனை விராட் கோலி 295 ஒருநாள் போட்டிகளில் 50 சதங்கள் அடித்து முறியடித்துள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் சச்சின் 34,283 ரன்கள் குவித்துள்ளார். இதுவரையில் விராட் கோலி 26,942 ரன்கள் எடுத்துள்ளார்.

Sachin Tendulkar and Virat Kohli

எனினும், விராட் கோலி ஓய்வு பெறுவதற்குள்ளாக 100 சதங்கள் மற்றும் சச்சின் டெண்டுல்கரின் 34,283 ரன்கள் சாதனையை முறியடிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. 100 சதங்கள் அடிக்க இன்னும் 20 சதங்கள் அடிக்க வேண்டும். விராட் கோலி இன்னும் 3 முதல் 4 ஆண்டுகள் கிரிக்கெட் விளையாடினால், ஒரு வருடத்திற்கு 6 முதல் 7 சதங்கள் வரை அடித்தால் அவர் கண்டிப்பாக சச்சின் டெண்டுல்கரின் 100 சதங்கள் சாதனையை முறியடிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos

click me!