ஹர்திக்-ஜாஸ்மின்: கிரிக்கெட் மைதானத்தின் புதிய காதல் ஜோடி?

Published : Aug 14, 2024, 12:07 PM ISTUpdated : Aug 14, 2024, 12:08 PM IST

இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா மற்றும் இங்கிலாந்து பாடகி ஜாஸ்மின் வாலியா இருவரும் காதலிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இருவரும் கிரீஸில் ஒன்றாக சுற்றுலா சென்ற புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானதை அடுத்து இந்த தகவல் பரவியது. ஹர்திக் பாண்டியா சமீபத்தில் தனது மனைவி நடாஷா ஸ்டான்கோவிச்சை விவாகரத்து செய்திருந்தார்.

PREV
19
ஹர்திக்-ஜாஸ்மின்: கிரிக்கெட் மைதானத்தின் புதிய காதல் ஜோடி?
Jasmin Walia Hardik Pandya relationship

இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா மற்றும் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த பாடகி, தொலைக்காட்சி பிரபலமுமான ஜாஸ்மின் வாலியா இருவரும் டேட்டிங் செய்வதாக சமூக வலைதளங்களில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. இந்திய அணியின் ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்டியா தனது மனைவி நடாஷா ஸ்டான்கோவிச்சை பிரிந்தார்.

29
Hardik Pandya natasa Stankovic divorce

கடந்த 2020 ஆம் ஆண்டு ஹர்திக் பாண்டியா மற்றும் நடாஷா ஸ்டான்கோவிச் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு அகஸ்தியா என்ற மகன் பிறந்தான். ஆரம்பத்தில் நன்றாக சென்று கொண்டிருந்த இவர்களது திருமணம் வாழ்க்கை 4 ஆண்டுகளுக்கு பிறகு முறிவுக்கு வந்தது. இருவரும் பரஸ்பர சமரசமாக பேசி பிரிந்தனர்.

39
Jasmin Walia Hardik Pandya Relationships

ஹர்திக் பாண்டியா எந்த ஒரு தொகையையும் நடாஷாவிற்கு ஜீவனாம்சமாக கொடுக்கவில்லை. எனினும் தனது மகனுக்கான எல்லாவற்றையும் செய்வேன் என்று கூறியிருந்தார். இந்த நிலையில் தான் ஹர்திக் பாண்டியா மற்றும் ஜாஸ்மின் வாலியா இருவரும் டேட்டிங் செய்வதாக சமூக வலைதளங்களில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. பாண்டியாவுடன் கிசுகிசுவில் சிக்கிய ஜாஸ்மின் வாலியா யார்? கிசுகிசுவில் சிக்க என்ன காரணம் என்று முழுவதையும் பார்க்கலாம் வாங்க…

49
Hardik Pandya relationships

ஜாஸ்மின் வாலியா இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த பாடகர் மற்றும் தொலைக்காட்சி பிரபலம். இசைத்துறையிலும், சமூக ஊடகங்களிலும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய அளவிற்கு பிரபலம். இந்த நிலையில் தான் இருவரும் சமூக ஊடக தொடர்பின் மூலமாக டேட்டிங் வதந்திகளை தூண்டியுள்ளனர். இருவரும் கிரீஸ் நாட்டில் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

59
Hardik Pandya Jasmin Walia

இங்கிலாந்தின் எசெக்ஸில், இந்திய வம்சாவளியின் பெற்றோருக்கு மகளாக பிறந்தவர் தான் இந்த ஜாஸ்மின் வாலியா. இங்கிலாந்து நாட்டு டிவி ரியாலிட்டி ஷோவான தி ஒன்லி வே இஸ் எசெக்ஸ் தொடரில் முதன் முதலாக தோற்றி பிரபலமடைந்தார். 2010 ஆம் ஆண்டு டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்பாளராக தோன்றி, 2012 ஆம் ஆண்டிற்குள்ளாக முழு நடிகையாக வலம் வந்தார். ரியாலிட்டி ஷோவின் வெளிப்பாடு பொழுதுபோக்கு துறையில் அவரை உச்சத்திற்கு கொண்டு சென்றது.

69
Jasmin Walia

இதைத் தொடர்ந்து 2014 ஆம் ஆண்டு ஜாஸ்மின் யூடியூப் சேனல் ஒன்றையும் தொடங்கினார். அதன் மூலமாக, ஜாக் நைட், இண்டென்ஸ் டி மற்றும் ஒல்லி கிரீன் மியூசிக் போன்ற கலைஞர்களுடன் இணைந்து தனது குரல் திறமையை வெளிப்படுத்தினார். ஜாக் நைட் உடன் இணைந்து அவர் பாடிய போம் டிக்கி என்ற பாடல் இசையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவே, பாலிவுட் படத்தில் அவரது புகழ் கொடி கட்டி பறந்தது.

79
Hardik Pandya natasa Stankovic divorce

சோனு கே டிடு கி ஸ்வீட்டி என்ற பாலிவுட் படத்தில் ஜாக் நைட், வாலியா பாடிய போம் டிக்கி என்ற பாடலை மாற்றி போம் டிக்கி டிக்கி என்று வெளியிட்டார். வாலியா, பிக்பாஸ் 13ன் இறுதிப் போட்டியாளரான அசிம் ரியாஸ் உடன் இணைந்து நைட் அன் ஃபைட்ஸ் என்ற இசை ஆல்பத்தில் பணியாற்றியுள்ளார்.

89
Jasmin Walia Hardik Pandya relationship

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வாலியாவை கிட்டத்தட்ட 6.4 லட்சத்திற்கும் அதிகமானோர் பின் தொடர்கின்றனர். அதோடு, யூடியூப்பில் 5.7 லட்சம் சப்ஸ்கிரைபர்ஸ் இருக்கின்றனர். ஜாஸ்மின் வாலியா, தனது இசை, பிகினி ஆகியவற்றிற்கு பெயர் பெற்றவர். எப்போதும் ஹாட் பிகினி புகைப்படங்களை சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.

99
Jasmin Walia Hardik Pandya vacation

எனினும், இதையெல்லாம் தாண்டி தற்போது ஹர்திக் பாண்டியா உடனான டேட்டிங்கில் சிக்கியுள்ள நிலையில் அவர் யார், அவரது தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் அவரது தொழில் குறித்து தேட வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories