
மகளிருக்கான டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய மகளிர் அணி இறுதிப் போட்டிக்கு செல்ல வேண்டுமானால் புள்ளிப்பட்டியலில் முதல் 2 இடங்களை பிடிக்க வேண்டும். ஆனால், இப்போது புள்ளிப்பட்டியலில் 4ஆவது இடத்தில் இருக்கிறது. 3ஆவது இடத்தில பாகிஸ்தான் இருக்கு. அப்போ இந்திய மகளிர் அணி அரையிறுதிக்கு முன்னேறுமா? இல்லையா? என்பது பற்றி பார்க்கலாமா? வாங்க..
9ஆவது முறையாக மகளிருக்கான டி20 உலக கோப்பை தொடர் நடத்தப்பட்டு வருகிறது. ஷார்ஜாவில் நடைபெறும் இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, வங்கதேசம், இலங்கை, வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்பிரிக்கா, ஸ்காட்லாந்து, இங்கிலாந்து என்று 10 அணிகள் இடம் பெற்று விளையாடி வருகின்றன.
இந்த 10 அணிகளும் குரூப் ஏ மற்றும் குரூப் என்று 2 பிரிவுகளாக பிரிந்து தலா 4 போட்டிகளில் விளையாடுகின்றன. இந்த 4 போட்டிகளில் 3ல் வெற்றி பெற வேண்டும். புள்ளிப்பட்டியலில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு செல்லும். நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா மகளிர் அணிகள் விளையாடிய போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதல் 1 இடங்களை பிடித்திருக்கின்றன.
பாகிஸ்தான் மற்றும் இந்தியா மகளிர் அணிகள் விளையாடிய 2 போட்டிகளில் ஒரு வெற்றி ஒரு தோல்வியோடு புள்ளிப்பட்டியலில் 3ஆவது மற்றும் 4ஆவது இடங்களை பிடித்துள்ளன. இலங்கை 2 போட்டியிலும் தோல்வி அடைந்து கடைசி இடத்தில் உள்ளது. இலங்கை அரையிறுதி வாய்ப்பை இழந்து டி20 உலகக் கோப்பை தொடரிலிருந்து வெளியேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய அணி நெட் ரன் ரேட்டில் மைனஸில் உள்ளது. எஞ்சிய 2 போட்டிகளிலும் இந்திய மகளிர் அணி கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும். அதில் ஒன்று இலங்கை மற்றொன்று ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிராக நடக்கிறது. ஆஸ்திரேலியா மகளிர் பலம் வாய்ந்த அணி என்பதால், முதலில் இலங்கைக்கு எதிரான போட்டியில் அதிக நெட் ரன் ரேட் அடிப்படையில் ஜெயிக்க வேண்டும்.
அப்போது தான் புள்ளிப்பட்டியலில் முன்னேற முடியும். அதே போன்று ஆஸ்திரேலியா மகளிர் அணியானது இன்று நடக்கும் நியூசிலாந்திற்கு எதிரான போட்டியில் தோற்க வேண்டும். அப்படி தோற்றால் இந்திய மகளிர் அணி புள்ளிப்பட்டியலில் 2ஆவது இடத்திற்கு முன்னேறும். மேலும், பாகிஸ்தானும் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் தோற்க வேண்டும்.
இலங்கைக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து தோற்று, இந்திய மகளிர் எஞ்சிய 2 போட்டியிலும் அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் புள்ளிப்பட்டியலில் நம்பர் 1 இடம் பிடித்து அரையிறுதிக்கு முன்னேறும். ஆனால், இதெல்லாம் நடக்கவில்லை என்றால் 9ஆவது முறையாக டி20 உலகக் கோப்பை தொடரிலிருந்து வெளியேறும். இதற்கு முன்னதாக நடைபெற்ற 8 டி20 உலகக் கோப்பை தொடரிலும் இந்திய மகளிர் அணி தோல்வி அடைந்து வெளியேறியது. ஒரு முறை மட்டுமே இறுதிப் போட்டி வரை வந்துள்ளது.
2008 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரில் ஆஸ்திரேலியா மகளிர் அணி மட்டுமே 6 முறை டிராபியை கைப்பற்றியிருக்கிறது. இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் தலா ஒரு முறை டிராபியை வென்றுள்ளன. நியூசிலாந்து 2 முறை இறுதிப் போட்டிக்கு சென்றுள்ளது.
இங்கிலாந்து 3 முறையும், இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா மகளிர் அணிகள் தலா ஒரு முறையும் இறுதிப் போட்டி வரை சென்று தோல்வி அடைந்து வெளியேறிவிட்டன. ஆனால், இந்த முறை ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய மகளிர் அணி எப்படியும் டி20 உலகக் கோப்பை டிராபியுடன் தான் நாடு திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.