
குவாலியரில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் வருண் சக்கரவர்த்தில் 3 ஆண்டுகளுக்கு பிறகு இடம் பெற்று விளையாடி பல சாதனைகளை தனக்கு சொந்தமாக்கி கொண்டுள்ளார். அதைப் பற்றி முழுமையாக காணலாம். கிரிக்கெட்டில் திறமையான வீரர்களுக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை. அப்படி கிடைத்தாலும் ஒரு சில போட்டிகளில் மட்டுமே வாய்ப்பு கிடைக்கிறது. அதன் பிறகு பல ஆண்டுகள் அவர்கள் ஓரங்கட்டப்பட்டு விடுகிறார்கள்.
தொடர்ந்து வாய்ப்புகள் கொடுக்கப்பட்டால் தான் அவர்களது திறமையை வெளிக்காட்ட முடியும். அந்த வகையில் ஐபிஎல் தொடர் மூலமாக இந்திய அணியில் இடம் பிடித்தவர் சுழல் ஜாம்பவான் அமைதி புயல் வருண் சக்கரவர்த்தி. 2021 ஆம் ஆண்டு ஜூலை 25 ஆம் தேதி நடைபெற்ற இலங்கைக்கு எதிரான டி20 போட்டியின் மூலமாக டி20 கிரிக்கெட்டில் அறிமுகமானார். ஆனால், இதுவரையில் ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமாகவில்லை.
கடைசியாக 2021 ஆம் ஆண்டு ஸ்காட்லாந்திற்கு எதிராக துபாயில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில் இடம் பெற்று விளையாடினார். இதில், 3 ஓவர்கள் வீசி 15 ரன்கள் கொடுத்தார். ஆனால், ஒரு விக்கெட் கூட எடுக்கவில்லை. அதன் பிறகு கிட்டத்தட்ட 3 ஆண்டுகளுக்கு பிறகு வங்கதேசத்திற்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற்றிருந்தார்.
ஆனால், பிளேயிங் 11ல் வாய்ப்பு கிடைக்காமல் பெஞ்சில் உட்கார வைக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டீம் இந்தியா அப்படி செய்யவில்லை. அவருக்கு பிளேயிங் 11ல் விளையாட வாய்ப்பு கொடுத்தது. குவாலியரில் நடைபெற்ற வங்கதேசத்திற்கு எதிரான முதல் டி20 போட்டியில் இடம் பெற்று விளையாடினார். இதில், 4 ஓவர்கள் வீசிய வருண் சக்கரவர்த்தி 3 முக்கியமான விக்கெட்டுகளை கைப்பற்றி சாதனை படைத்தார்.
எப்படி என்றால், கிட்டத்தட்ட 3 ஆண்டுகளுக்கு பிறகு டி20 கிரிக்கெட்டிற்கு திரும்பிய வருண், நீண்ட நாட்களுக்கு பிறகு விக்கெட் கைப்பற்றிய வீரர் என்ற சாதனையை படைத்தார். முதல் பவர்பிளேயான போட்டியின் 5ஆவது ஓவரை வீச வந்த வருண் சக்கரவர்த்தில் அந்த ஓவரில் மட்டும் 2 பவுண்டரி, ஒரு சிக்ஸர் உள்பட மொத்தமாக 15 ரன்கள் கொடுத்தார். ஆனால், இந்த ஓவரில் தவ்ஹித் ஹிரிடோய் கொடுத்த கேட்ச் வாய்ப்பை நிதிஷ் ரெட்டி தவறவிட்டார். ஆதலால், அவர் அதிக ரன்கள் கொடுக்க நேரிட்டது.
அதன் பிறகு 7ஆவது ஓவரை வீச வந்தார். அந்த ஓவரில் 3 ரன்கள் மட்டுமே கொடுத்து ஒரு விக்கெட் எடுத்தார். மீண்டும் 10ஆவது ஓவரை வீச வந்த வருண், அந்த ஓவரில் ஒரு விக்கெட் உள்பட 8 ரன்கள் கொடுத்தார். கடைசியாக 14ஆவது ஓவரில் 5 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட் எடுத்தார். இதன் மூலமாக வருண் சக்கவரத்தி 4 ஓவர்கள் வீசி 31 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகள் எடுத்துள்ளார்.
இந்தப் போட்டியில் விளையாடியதன் மூலமாக 86 நாட்கள் இடைவெளிக்கு பிறகு 2021 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் காலத்தில் ஒரு டி20 போட்டியில் கூட விளையாடாத 2ஆவது இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார். முதல் இடத்தில் கலீல் அகமது இடம் பெற்றிருக்கிறார். அவர் 104 நாட்களுக்கு பிறகு இந்திய அணிக்கு திரும்பி டி20 கிரிக்கெட்டில் விளையாடினார்.
வங்கதேசத்திற்கு எதிரான முதல் டி20 போட்டி கிரிக்கெட்டில் மாயங்க் யாதவ் மற்றும் நிதிஷ் ரெட்டி இருவரும் அறிமுகம் செய்யப்பட்டனர். மாயங்க் யாதவ் தனது அறிமுக டி20 போட்டியில் முதல் ஓவரை மெய்டனாக வீசி 2ஆவது ஓவரில் விக்கெட் கைப்பற்றி சாதனை படைத்தார். மேலும் முதல் ஓவரை மெய்டனாக வீசிய 3ஆவது இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார். இதற்கு முன்னதாக அஜித் அகர்கர் மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோர் அறிமுக டி20 போட்டியில் முதல் ஓவரை மெய்டனாக சாதனை படைத்துள்ளனர். அவர்களது பட்டியலில் மாயங்க் யாதவ்வும் இடம் பெற்றுள்ளார்.
நிதிஷ் ரெட்டி 2 ஓவர்கள் பந்து வீசி ஒரு விக்கெட் கூட எடுக்கவில்லை. பேட்டிங்கில் 15 பந்தில் ஒரு சிக்ஸர் உள்பட 16 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியில் இந்திய அணி வென்றதன் மூலமாக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என்று முன்னிலையில் உள்ளது.
இந்தப் போட்டியைத் தொடர்ந்து வரும் 9 ஆம் தேதி இரு அணிகளுக்கு இடையிலான 2ஆவது டி20 போட்டி நடைபெறுகிறது. இந்தப் போட்டி டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடக்கிறது. 3ஆவது மற்றும் கடைசி டி20 போட்டி 12 ஆம் தேதி ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.