ஹர்திக் பாண்ட்யாவை கழட்டி விடும் மும்பை இந்தியன்ஸ்.. மீண்டும் கேப்டனாகும் ரோகித் சர்மா?.. புது தகவல்!

Published : Apr 25, 2026, 02:57 PM IST

ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியில் ஹர்திக் பாண்ட்யாவின் கேப்டன்சி மீது கடும் விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், அவரை மாற்ற அணி நிர்வாகம் யோசித்து வருகிறது. ரோகித் சர்மா மீண்டும் கேப்டனாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

PREV
14
மும்பை இந்தியன்ஸ் படுமோசம்

ஐபிஎல் 2026 சீசன் களைகட்டியுள்ள நிலையில் 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியின் நிலைமை மிகவும் பரிதாபமாக உள்ளது. இதுவரை 7 போட்டிகளில் விளையாடியுள்ள மும்பை இந்தியன்ஸ் 2 போட்டிகளில் மட்டுமே வென்று, 5 போட்டிகளில் தோல்வி அடைந்து 4 புள்ளிகள் மட்டுமே பெற்றுள்ளது. ஐபிஎல் 2026 சீசன் தொடங்குவதற்கு முன், மும்பை இந்தியன்ஸ் மீது பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. மும்பை அணி

நிர்வாகம், ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட், குயின்டன் டி காக் போன்ற அதிரடி வீரர்களை அணிக்குள் கொண்டுவந்தது. ஆனால், களத்தில் அணி தொடர்ந்து சொதப்புகிறது.

24
ஹர்திக் பாண்ட்யா கேப்டன்சி சொதப்பல்

ஆனால் இந்த சீசனில் மும்பை கடுமையாக சொதப்புகிறது. அதுவும் ஏப்ரல் 23 அன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக 103 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இது மும்பை அணியின் வரலாற்றிலேயே மிகப்பெரிய தோல்வியாகும். ஹர்திக் பாண்ட்யாவின் கேப்டன்சி படுமோசமாக உள்ளது. கடந்த மூன்று சீசன்களாக மும்பை அணியை அவர் வழிநடத்தி வருகிறார். 

ஆனால், அவரது தலைமையில் அணி ஒருமுறை கூட இறுதிப்போட்டிக்கு தகுதி பெறவில்லை. தொடர் தோல்விகளால், வீரர்களை ஒருங்கிணைப்பதில் அவர் தவறிவிட்டார் என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதனால், பாண்ட்யாவை நீக்கினால், கேப்டன் பதவிக்கான போட்டியில் நான்கு வீரர்கள் முன்னணியில் உள்ளனர்.

34
ரோகித் சர்மா

ரோகித் சர்மா மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 5 ஐபிஎல் கோப்பைகளை வென்று கொடுத்துள்ளார். ஐபிஎல் வரலாற்றின் வெற்றிகரமான கேப்டன்களில் இவரும் ஒருவர். இந்திய அணிக்கு 2024 டி20 உலகக் கோப்பையை வென்று கொடுத்த ரோஹித், அழுத்தமான சூழல்களை கையாள்வதில் கில்லாடி. அணி நிர்வாகத்திற்கு ஒரு பாதுகாப்பான தேர்வு தேவைப்பட்டால், ரோஹித்தை விட சிறந்தவர் யாரும் இல்லை.

மிட்செல் சான்ட்னர்

நியூசிலாந்தின் மிட்செல் சான்ட்னர் இந்த ரேஸில் ஒரு சர்ப்ரைஸ் தேர்வாக இருக்கலாம். சர்வதேச அளவில் கிவி அணியை அவர் வெற்றிகரமாக வழிநடத்திய அனுபவம் கொண்டவர். அமைதியாக முடிவெடுப்பதிலும், ஸ்பின்னர்களை திறமையாக பயன்படுத்துவதிலும் சான்ட்னர் ஒரு நிபுணர். ஒரு வெளிநாட்டு வீரரை கேப்டனாக நியமிக்க நினைத்தால், சான்ட்னர் மும்பைக்கு ஒரு நல்ல தேர்வாக இருப்பார்.

44
சூர்யகுமார் யாதவ்

'மிஸ்டர் 360' என அழைக்கப்படும் சூர்யகுமார் யாதவ், ஏற்கனவே இந்திய அணியை கேப்டனாக வழிநடத்திய அனுபவம் உள்ளவர். ஐபிஎல் 2026-ல் அவரது பேட் பெரிதாக பேசவில்லை என்றாலும், வியூகம் வகுப்பதில் சூர்யாவுக்கு நல்ல பெயர் உண்டு. தற்போது அவர் அணியின் துணை கேப்டனாகவும் இருக்கிறார். ஹர்திக்கிற்குப் பிறகு கேப்டன் பொறுப்பை ஏற்க சூர்யா தகுதியான வீரர்.

ஜஸ்பிரித் பும்ரா

2013 முதல் மும்பை இந்தியன்ஸின் முக்கிய வீரராக இருக்கும் ஜஸ்பிரித் பும்ரா, இந்த லீகில் 152 போட்டிகளில் 185 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். பும்ரா ஒரு சீனியர் வீரர் மட்டுமல்ல, ஆட்டத்தை நன்கு புரிந்து கொள்பவர். ஏற்கனவே இந்திய டெஸ்ட் அணியை வழிநடத்திய அனுபவமும் அவருக்கு உண்டு. பேட் கம்மின்ஸ் போல, ஒரு பவுலராக அணியின் தலையெழுத்தை பும்ராவால் மாற்ற முடியும் என கிரிக்கெட் வல்லுநர்கள் நம்புகிறார்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories