சாம்பியன்ஸ் டிராபி பைனலில் மேட் ஹென்றி விளையாடுவாரா? மிட்செல் சான்ட்னர் விளக்கம்!

Published : Mar 07, 2025, 05:30 PM IST

Matt Henry Out? NZ Final Hopes Dim? : ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரில் தென் ஆப்பிரிக்காவிற்கு எதிராக நடந்த 2ஆவது அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்து வீரர் மேட் ஹென்றி தோள்பட்டையில் காயம் அடைந்த நிலையில் இந்தியாவிற்கு எதிரான போட்டியில் அவர் பங்கேற்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

PREV
16
சாம்பியன்ஸ் டிராபி பைனலில் மேட் ஹென்றி விளையாடுவாரா? மிட்செல் சான்ட்னர் விளக்கம்!

Matt Henry Injury: Will He Play India vs NZ ICC champions trophy 2025 Final? ஐசிசி சாமியன்ஸ் டிராபி 2025 இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டி வரும் 9ஆம் தேதி துபாய் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் நியூசிலாந்து வீரர் மேட் ஹென்றி பங்கேற்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. தென் ஆப்பிரிக்காவிற்கு எதிராக நடைபெற்ற 2ஆவது அரையிறுதிப் போட்டியின் போது நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் மேட் ஹென்றிக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது.

26
India Vs New Zealand Matt Henry Injury

தென் ஆப்பிரிக்கா வீரர் ஹென்ரிக் கிளாசெனின் கேட்சை பிடிக்கும் போது அவரது ரைட் சைடு ஷோல்டர் தரையில் பலமாக இடித்தது. இதனால் வலியால் துடித்த ஹென்றி சிகிச்சைக்காக வெளியில் சென்றார். சிகிச்சைக்கு பிறகு மீண்டும் வந்து 2 ஓவர்கள் பந்து வீசி ககிசோ ரபாடா விக்கெட்டை கைப்பற்ற்னார். அவர் 7 ஓவர்கள் வீசி 2 விக்கெட் எடுத்து 43 ரன்கள் விட்டுக் கொடுத்தார். நியூசி அணியின் மிக முக்கியமான வீரரான ஹென்றி இறுதிப் போட்டியில் விளையாடவில்லை என்றால் அது கிவிஸ் அணிக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடும்.

36
ICC Champions Trophy 2025 Final India Vs New Zealand Matt Henry Injury

ஹென்றியின் காயம் அப்டேட்:

ஹென்றியின் காயம் குறித்து நியூசிலாந்து கேப்டன் மிட்செல் சான்டனர் கூறியிருப்பதாவது: மேட் ஹென்றியின் தோள்பட்டை காயம் குறித்து தெரிந்து கொள்ள வெயிட் பண்ண வேண்டியிருக்கிறது. மேலும், தொள்பட்டை காயத்தால் அவரது தோள்பட்ட ரொம்பவே வீங்கியிருக்கிறது. இன்னும் 2 நாட்கள் காத்திருக்க வேண்டும். அதன் பிறகு தான் அவரோட நிலை குறித்து தெரியவரும். அரையிறுதிப் போட்டி முடிந்த பிறகு நியூசிலாந்துக்கு இறுதிப் போட்டிக்கு முன்பு நிறைய நேரம் இருக்கிறது. அதனால், எப்படியும் ஹென்றி ஃபிட் ஆகிவிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறடு. எதுவாக இருந்தாலும் காயத்தின் தன்மையைப் பொறுத்து தான் முடிவு செய்யப்படும். காயத்தின் பாதிப்பு அதிகளவில் இல்லையென்றால் அவர் இறுதிப் போட்டியில் விளையாட முயற்சி செய்வார்.

46
ICC Champions Trophy 2025 Final India Vs New Zealand

16 வருடம் கழித்து சாம்பியன்ஸ் டிராபி பைனலில் நியூசிலாந்து

கடைசியாக கடந்த 2009 ஆம் ஆண்டு ஐசிசி சாம்பிய்ன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் நியூசிலாந்து விளையாடியது. தற்போது 16 வருடங்களுக்கு பிறகு ஐசிசி சாம்பியன்ஸ் 2025 டிராபி தொடரின் இறுதிப் போட்டியில் விளையாடுகிறது. இதற்கு முன்னதாக 2000 ஆம் ஆண்டில் ஐசிசி நாக் அவுட் இறுதிப் போட்டியில் இந்தியாவை தோற்கடித்து சாம்பியன் பட்டம் வென்றது. இதே போன்று 2021 ஆம் ஆண்டு ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியாவை தோற்கடித்து நியூசிலாந்து சாம்பியனானது.

56
ICC Champions Trophy 2025 Final India Vs New Zealand Matt Henry Injury

இதுவரையில் 2 முறை ஐசிசி தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதியுள்ளன. இதில் 2 முறையும் நியூசிலாந்து வெற்றி பெற்றிருக்கிறது. தற்போது 3ஆவது முறையாக இரு அணிகளும் மோதுகின்றன. இந்தப் போட்டியில் டீம் இந்தியா எப்படியும் வெற்றி பெற வேண்டும் என்று ரசிகர்கள் ரொம்பவே ஆர்வமாக இருக்கிறார்கள். 

66
ICC Champions Trophy 2025 Final India Vs New Zealand Matt Henry Injury

இந்த தொடரில் இந்தியா விளையாடிய 3 போட்டியிலும் வெற்றி பெற்று இப்போது இறுதிப் போட்டிக்கு முன்னேறியிருக்கிறது. இதில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவரும் தொடர்ந்து 3ஆவது ஐசிசி தொடரின் இறுதிப் போட்டியில் விளையாடுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.  

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
click me!

Recommended Stories