பைனலில் ஜெயிக்கப் போவது யாரு? அம்பத்தி ராயுடு சொன்னது அப்படியே நடக்கப் போகுதா?

Published : Mar 06, 2025, 04:24 PM ISTUpdated : Mar 06, 2025, 04:33 PM IST

சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. சவாலாக இருந்தாலும், இந்திய அணியின் பேட்டிங் பலம் வெற்றிக்கு உதவும் என முன்னாள் இந்திய வீரர் அம்பத்தி ராயுடு நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

PREV
14
பைனலில் ஜெயிக்கப் போவது யாரு? அம்பத்தி ராயுடு சொன்னது அப்படியே நடக்கப் போகுதா?
IND vs NZ: ICC Champions Trophy 2025 Ambati Rayudu Prediction

சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டி துபாயில் ஞாயிற்றுக்கிழமை இந்திய நேரப்படி பிற்பகல் 2.30 மணிக்குத் தொடங்கும். இந்தத் தொடரில் இந்திய அணி தோல்வியடையாமல் இறுதிப் போட்டியை எட்டியுள்ளது. இந்தியாவுடன் பலப்பரீட்சை நடத்தவுள்ள நியூசிலாந்து அணி, குரூப் சுற்று ஆட்டத்தில் இந்தியாவிடம் மட்டும் தோல்வி அடைந்தது. இருந்தாலும் அந்த அணி பலம் வாய்ந்ததாகவே இருக்கிறது.

24
IND vs NZ: Ambati Rayudu on New Zealand Team

நியூசிலாந்து அணி பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் என அனைத்திலும் வலுவாக உள்ளது. இந்தத் தொடரில் இந்திய அணிக்கு அழுத்தம் கொடுத்த ஒரே அணி நியூசிலாந்து மட்டும்தான். இந்திய அணியைப் போலவே நியூசிலாந்து அணியிலும் நான்கு சுழற்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். நியூசிலாந்து வீரர்களும் பேட்டிங்கில் சிறப்பாக விளையாடி வருகின்றனர். அனுபவ வீரர் கேன் வில்லயியம்சன், இளம் வீரர் ரச்சின் ரவீந்திரா ஆகியோர் சதமடித்து நல்ல ஃபார்மில் உள்ளனர். இதனால் இறுதிப் போட்டி நிச்சயம் பரபரப்பாகவே இருக்கப் போகிறது. எந்த அணி பைனலில் வெற்றி பெறும் என்று கணிப்பது கடினம்தான்.

34
IND vs NZ: Ambati Rayudu on Team India Performance

இந்தச் சூழ்நிலையில் இறுதிப்போட்டியில் வென்று கோப்பையைத் தட்டிச் செல்லப்போகும் அணி எது என்று முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் அம்பத்தி ராயுடு கணித்துள்ளார். "இறுதிப் போட்டி இந்தியாவுக்கு கடுமையான சவாலாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இரு அணிகளும் பலமாக இருப்பதால் இந்தப் போட்டி ரசிகர்களுக்கு விருந்தாக அமையும். நியூசிலாந்து அணியில் நான்கு வீரர்கள் மட்டுமே போட்டி மாற்றக்கூடியவர்கள். இந்திய அணியில் 11 வீரர்களுமே போட்டியின் போக்கையே மாற்றுபவர்கள்தான்" என்று ராயுடு கூறியுள்ளார்.

44
Ambati Rayudu about Mitchell Santner

இந்திய அணி கோப்பை வெல்ல நல்ல வாய்ப்பு உள்ளது என்று கூறியுள்ள ராயுடு, நியூசிலாந்து அணியில் கேப்டன் மிட்செல் சாண்ட்னர் இந்திய அணிக்கு அச்சுறுத்தலாக இருப்பார் கருதுவதாகவும் தெரிவித்துள்ளார். "இறுதி ஆட்டத்தில் சாண்ட்னர் முக்கியமான விக்கெட்டுகளை வீழ்த்தி, இந்திய அணிக்கு அழுத்தத்தை ஏற்படுத்துவார். ஆனால். இந்திய அணியில் விராட் கோலி போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர். இந்திய அணியின் அனுபவ வீரர்கள் நியூசிலாந்து பந்துவீச்சை அற்புதமாக சமாளித்து வெற்றியை உறுதிசெய்வார்கள் என நம்புகிறேன்" என்றும் அம்பத்தி ராயுடு தெரிவித்திருக்கிறார்.

அம்பத்தி ராயுடுவின் கணிப்புகள் அப்படியே பலிக்குமா? இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபியை வென்று சாதனை படைக்குமா? என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories