
இந்திய அணியில் ஜாகீர் கான், ஜஸ்ப்ரித் பும்ரா, ஆஷிஷ் நெஹ்ரா, அர்ஷ்தீப் சிங், முகமது சிராஜ், முகமது ஷமி ஆகியோர் யார்க்கர் வீசக் கூடிய பந்து வீச்சாளர்கள். இதில் ஜாகீர் கான், ஆஷிஷ் நெஹ்ரா, அஜித் அகர்கர் ஆகியோர் ஓய்வு பெற்றவர்கள். தற்போது உள்ள இந்திய அணியில் பும்ரா, அர்ஷ்தீப் சிங், ஷமி, சிராஜ் ஆகியோர் யார்க்கர் வீசுவார்கள். ஆனால், பெர்ஃபெக்டாக வீசக் கூடியவர்கள் யார் என்று கேட்டால் அது பும்ரா மற்றும் ஷமி இருவரை சொல்லலாம்.
சரி, ஒரு சரியான யார்க்கர் பந்து எப்படி வீச வேண்டும்? அதற்கான வழிமுறைகள் என்ன்? பந்து வீச்சாளர் என்ன மனநிலையில் இருக்க வேண்டும்? என்பது பற்றி பார்க்கலாம் வாங்க….பந்து வீச்சுகளின் கோடு மற்றும் நீளத்தை பராமரிப்பது வேகப்பந்து வீச்சின் மிக முக்கியமான அம்சம். தொடக்கம் அல்லது பவர்பிளே ஓவர்கள் அல்லது டெத் ஓவர்களில் சரியான லைன் மற்றும் லெந்த் முக்கியமானது.
டெத் ஓவர்களில் சரியான யார்க்கர்களை வீசுவது மிகவும் முக்கியம். முதலை அதனை புரிந்து கொள்ள வேண்டும். அப்படி புரிந்து கொண்டால் அதனை சரியாக முறையில் செய்து விக்கெட்டுகளை கைப்பற்றுவதோடு, ரன்கள் எடுக்க விடாமல் தடுக்கவும் செய்யலாம். ஆனால், தோனி போன்ற ஒரு பேட்ஸ்மேனுக்கு யார்க்கர் அந்தளவிற்கு எடுபடாது. ஏனென்றால், அவர் ஹெலிகாப்டர் ஷாட் அடிப்பவர்.
அவருக்கு வைடாக ஸ்லோயர் பந்து வீசி அவரது விக்கெட்டை எடுக்க வேண்டும். இல்லையென்றால் தோனியின் சிக்ஸர் மழை தான். அது பந்து வீச்சாளருக்கு அழுத்தத்தை கொடுக்கும். யார்க்கர் என்பது பேட்ஸ்மேன்களின் கால்களுக்கு அருகில் வீசப்படும் பந்து. இது பேட்ஸ்மேன்களை ரன்கள் அடிக்க விடாமல் தடுக்கும். அதோடு பேட்ஸ்மேனை திணறவும் வைக்கும்.
யார்க்கரை தடுக்க பேட்ஸ்மேன் பேட்டை உடனடியாக கீழே இறக்க வேண்டும். பேட்டானது பந்தை சரியாக எதிர்கொள்ளவில்லை என்றால் யார்க்கர் நழுவி ஸ்டெம்பை குறி வைக்கும். அப்படியில்லை என்றால் பேட்ஸ்மேனின் பேடில் பட்டு எல்பிடபிள்யூ ஆக வாய்ப்பு கொடுக்கும்.
எப்படி சரியான யார்க்க வீசுவது?
பந்தை கிரிப்பாக பிடிக்க வேண்டும்:
ஆள்காட்டி மற்றும் நடுத்தர விரல்களை பந்தின் நடுப்பகுதியின் இருபுறமும் வைத்து பிடிக்க வேண்டும். கட்டைவிரலை சுட்டு விரலில் அதே பக்கத்தில் வைத்து பிடிக்க வேண்டும்.
ரிலாக்ஸ் மற்றும் மனநிலை சரிபார்ப்பு:
யார்க்கர் வீசுவதற்கு முன்பு ஆழமான சுவாசத்தை எடுத்து கொள்ள வேண்டும். இது உங்களது கவனத்தை அதிகரிக்க உதவும்.
ரன் அப்பை சரி செய்தல்:
ஒரு நிலையான ரன் அப்பை எடுத்துக் கொள்ள வேண்டும். இது மைதானத்திலிருந்து சரியான தூரத்திலிருந்து ஓடி வந்து சரியான யார்க்கர் வீசுவதற்கு வழி வகுக்கும்.
வேகம்:
ஒரு பவுலருக்கு வேகம் தான் முக்கியம். சரியான வேகத்தில் ஓடி வந்து சரியான டார்க்கெட்டை நோக்கி பந்தை அனுப்ப வேண்டும்.
சரியான டெலிவரி:
பந்தை பேட்ஸ்மேனின் கால்களுக்கு அருகில் போட வேண்டும். நீங்கள் துல்லியமாக வீச வேண்டும் என்றால் ஒன்று கிரீஸை எடுத்துக் கொள்ளலாம். இரண்டாவது பேட்ஸ்மேனின் கால்விரல்களை எடுத்துக் கொள்ளலாம். பதற்றமில்லாமல் சரியான இலக்கில் கவனம் செலுத்தி பந்தை வீச வேண்டும்.
சரியான யார்க்கருக்கு ஒவ்வொரு புள்ளியையும் பின்பற்ற வேண்டும். பும்ரா, புவனேஷ்வர் குமார் போன்ற புகழ்பெற்ற யார்க்கர் கிங்மேக்கர்களை உதாரணத்திற்கு நீங்கள் எடுத்துக் கொள்ளலாம்.