தோனியின் ஹெலிகாப்டர் ஷாட் பயிற்சி ரகசியம்!

First Published | Aug 18, 2024, 6:49 PM IST

உலகப் புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனியின் ஹெலிகாப்டர் ஷாட்டின் பின்னணியில் இருக்கும் ரகசியம் என்ன? அவரது இந்த அசாத்தியமான ஷாட்டிற்கான பயிற்சி முறை குறித்த சுவாரஸ்ய தகவல்கள் இதோ.

MS Dhoni Helicopter Shot

உலகம் முழுவதும் ரசிகர் பட்டாளங்களை கொண்டவர் எம்.எஸ்.தோனி. இந்திய கிரிக்கெட் அணியில் 2004 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரையில் 14 ஆண்டுகள் இடம் பெற்று விளையாடினார். ஒரு கேப்டனாகவும், ஒரு பிளேயராகவும் இந்திய அணியில் பல சாதனைகளை படைத்துள்ளார்.

MS Dhoni

முதல் முறையாக இந்திய அணிக்கு டி20 உலகக் கோப்பையை வென்று கொடுத்த பெருமை இவரையே சேரும். 1983 ஆம் ஆண்டுக்கு பிறகு தோனி தலைமையிலான இந்திய அணி 2011 ஆம் ஆண்டு 2ஆவது முறையாக ஒருநாள் உலகக் கோப்பையை வென்றது. தோனியைப் பற்றி அனைவரும் அறிந்த ஒன்று தான். ஆனால், அவரது ஹெலிகாப்டர் ஷாட்டுக்கான பயிற்சி பற்றி பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

Tap to resize

MS Dhoni

பம்பு செட்டுகளிலிருந்து தண்ணீரை வெளியேற்றுவதற்கு பம்பு ஸ்டார்ட் செய்வதற்கு இரு இரும்பு ராடு கொண்டு இயந்திரத்தை சுற்றுவார்கள். அதே போன்று தான் தான் தோனியும் ஒரு இயந்திரத்தை சுற்றி ஹெலிகாப்டர் அடிப்பதற்கு தன்னை தயார்படுத்திக் கொண்டுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

Chennai Super Kings

ஆரம்பத்தில் கால்பந்து விளையாடி வந்த தோனி, கிரிக்கெட் மீது கவனத்தை செலுத்தி முதலில் விக்கெட் கீப்பராக பயிற்சியை மேற்கொண்டார்.அதன் பிறகு பேட்டிங்கிலும் பயிற்சியை தொடங்கி உள்ளூர் போட்டிகளில் அதுவும் பீகார் அணிக்காக விளையாடினார். அதன் பிறகு ஜார்க்கண்ட் அணிக்காக விளையாடினார். அப்போது தான் கடந்த 2004 ஆம் ஆண்டு இந்திய அணியில் இடம் பிடித்தார். முதலில் வங்கதேச அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டியின் மூலமாக டிசம்பர் 23, 2004 ஆம் ஆண்டு ஒரு நாள் தொடரில் அறிமுகமானார்.

MS Dhoni Cricket Career

இந்தப் போட்டியில் தோனி ஒரு பந்து தான் விளையாடினார். அந்தப் பந்திலேயும் ரன் அவுட் செய்யப்பட்டார். எனினும், அந்தப் போட்டியில் இந்தியா 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அன்றைய காலகட்டத்தில் சவுரவ் கங்கிலி தான் கேப்டனாக இருந்தார்.

Dhoni

இதே போன்று டிசம்பர் 2, 2005 ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் மூலமாக டெஸ்ட் தொடரில் அறிமுகமானார். இந்தப் போட்டியில் தோனி 53 பந்துகளில் 6 பவுண்டரி உள்பட 30 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். எனினும், இந்தப் போட்டி மோசமான வானிலை காரணமாக டிராவில் முடிந்தது. முதல் 3 நாட்கள் போட்டி மழை, மோசமான வானிலை காரணமாக நடக்கவில்லை. கடைசி 2 நாட்கள் மட்டுமே போட்டி நடந்தது.

Dhoni Helicopter Shot

இதையடுத்து 2006 ஆம் ஆண்டு டிசம்பர் 1 ஆம் தேதி தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 போட்டியின் மூலமாக டி20 தொடரில் அறிமுகமானார். இந்தப் போட்டியிலும் தோனி 2 பந்துகளில் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். இதில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தோனி தனது கடைசி டி20 போட்டியில் 23 பந்துகளில் 3 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் உள்பட 40 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.

MS Dhoni

கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் 2017 வரை ஒரு நாள் கிரிக்கெட்டிலும், 2008 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரையில் டெஸ்ட் போட்டியிலும் கேப்டனாக இருந்துள்ளார். 2007 ஆம் ஆண்டு ஐசிசி டி20 உலகக் கோப்பை, 2011 கிரிக்கெட் உலகக் கோப்பை, 2013 ஐசிசி சாம்பியன்ஷிப் டிராபி, 2010 மற்றும் 2016 ஆம் ஆண்டு ஆசிய கோப்பையும் கைப்பற்றியுள்ளார். கடந்த 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos

click me!