சிஎஸ்கே அணிக்கு எதிரான ஒரு கேப்டனாக ஹர்திக் பாண்டியாவின் சாதனைகள் என்ன?

First Published | Apr 14, 2024, 1:21 PM IST

ஒரு கேப்டனாக ஹர்திக் பாண்டியா சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான 5 போட்டிகளில் விளையாடி 3 வெற்றி பெற்று கொடுத்துள்ளார்.

எம்.எஸ்.தோனி மற்றும் ரோகித் சர்மா இருவரும் கேப்டன்களாக இல்லாமல் முதல் முறையாக இன்று நடக்கும் போட்டியில் களமிறங்குகின்றனர். ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் விளையாடிய 5 போட்டிகளில் 2 போட்டிகளில் வெற்றியும், 3 போட்டிகளில் தோல்வியும் அடைந்து புள்ளிப்பட்டியலில் 7ஆவது இடம் பிடித்துள்ளது.

ஒரு கேப்டனாக சிஎஸ்கே அணிக்கு எதிராக ஹர்திக் பாண்டியா விளையாடிய 5 போட்டிகளில் 3 வெற்றியும், 2 தோல்வியும் அடைந்துள்ளார். கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் முறையாக ஐபிஎல் கிரிக்கெட்டில் களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு ஹர்திக் பாண்டியா கேப்டனாக நியமிக்கப்பட்டார். கடந்த 2022 ஆம் ஆண்டு நடந்த சிஎஸ்கே அணிக்கு எதிரான 2 போட்டிகளிலும் ஹர்திக் பாண்டியா ஒரு கேப்டனாக வெற்றி பெற்றார்.

Tap to resize

Hardik Pandya (📸 : X@SPORTYVISHAL)

இதே போன்று கடந்த ஆண்டு நடந்த முதல் போட்டியில் வெற்றி பெற்ற பாண்டியா, அடுத்து நடந்த லீக் போட்டியில் தோல்வி அடைந்ததோடு, ஐபிஎல் 2023 இறுதிப் போட்டியில் கடைசி பந்தில் தோல்வியும் அடைந்துள்ளார்.

Hardik Pandya and Rohit

இந்த நிலையில் ஐபிஎல் 2023 இறுதிப் போட்டி தோல்விக்கு பதிலடி கொடுக்க ஹர்திக் பாண்டியாவிற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. வான்கடே மைதானத்தில் கடைசியாக நடந்த 3 போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் 2 வெற்றியும், ஒரு தோல்வியும் அடைந்துள்ளது.

Hardik Pandya

இன்றும் மும்பை இந்தியன்ஸ் தனது ஹோம் மைதானத்தில் 29ஆவது லீக் போட்டியில் சிஎஸ்கே அணியை எதிர்கொள்கிறது. இதில், மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெறுவதற்கு 70 சதவிகித வாய்ப்புகள் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos

click me!