பஞ்சாப் மாநிலம் மொகாலியிலுள்ள முல்லன்பூர் பகுதியில் ஐபிஎல் தொடரின் 27ஆவது லீக் போட்டி நடைபெற்று வருகிறது. இதில், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன.
டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் பவுலிங் தேர்வு செய்தார். அதன்படி பஞ்சாப் கிங்ஸ் முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 147 ரன்கள் குவித்தது.
அதர்வா டைடு மற்றும் ஜானி பேர்ஸ்டோவ் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கி 15 மற்றும் 15 ரன்களில் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த பிராப்சிம்ரன் 10, கேப்டன் சாம் கரண் 6, ஷஷாங்க் சிங் 6 என்று வரிசையாக சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
ஜித்தேஷ் சர்மா மற்றும் லியாம் லிவிங்ஸ்டன் ஓரளவு ரன்கள் சேர்த்தனர். ஜித்தேஷ் சர்மா 29 ரன்னிலும், லியாம் லிவிங்ஸ்டன் 21 ரன்னிலும் வெளியேறினர். கடைசியில் வந்த அஷூதோஷ் சர்மா அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தார்.
அவர் 16 பந்துகளில் 3 சிக்ஸர், ஒரு பவுண்டரி உள்பட 31 ரன்கள் எடுத்து கடைசியில் ஆட்டமிழந்தார். இறுதியாக பஞ்சாப் கிங்ஸ் 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 147 ரன்கள் குவித்தது.
இந்த சீசனில் 3ஆவது குறைந்தபட்ச ஸ்கோரை பஞ்சாப் கிங்ஸ் எடுத்துள்ளது. மும்பை இந்தியன்ஸ் எடுத்த 125/9 மற்றும் 137/9 ரன்கள் குறைந்தபட்ச ஸ்கோராக இருந்தது.
பவுலிங்கைப் பொறுத்த வரையில் ஆவேஷ் கான் மற்றும் கேசவ் மகராஜ் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர். டிரெண்ட் போல்ட், குல்தீப் சென், யுஸ்வேந்திர சஹால் தலா ஒரு விக்கெட்டுகள் கைப்பற்றினர்.