Delhi Capitals, IPL 2024 Points Table
ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது. கடந்த ஆண்டு நடந்த ஐபிஎல் திருவிழாவில் டெல்லி கேபிடல்ஸ் விளையாடிய முதல் 6 போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றிருந்தது. ஆனால், இறுதியில் 5 போட்டிகளில் வெற்றியோடு முடித்தது. இந்த சீசனில் அதிக வெற்றிகளை குவித்து 3 ஆண்டுகளுக்கு பிறகு பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியுமா? என்பது குறித்து பார்க்கலாம்.
Delhi Capitals, IPL 2024
நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் டெல்லி கேபிடல்ஸ் ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் இருந்தது. நேற்று லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 9ஆவது இடத்திற்கு முன்னேறியது.
Delhi Capitals
இப்போது கேள்வி என்னவென்றால், விளையாடிய 6 போட்டிகளில் 2ல் வெற்றி பெற்று 9ஆவது இடம் பிடித்துள்ள டெல்லி கேபிடல்ஸ் இந்த ஆண்டு ஐபிஎல் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுமா? என்பது தான்.
Delhi Capitals PlayOffs
ஆனால், டெல்லி கேபிடல்ஸ் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற வேண்டுமானால், எஞ்சிய 8 போட்டிகளில் குறைந்தது 5 போட்டிகளில் வெற்றி பெற வேண்டும். ஆனால், கடந்த சீசனில் பிளே ஆஃப் சென்ற டாப் 4 டீம்ஸ் முறையே 20, 17, 17, 16 புள்ளிகள் பெற்றிருந்தன. அதே போன்று இந்த சீசனிலும் நடக்க நேர்ந்தால் டெல்லி கேபிடல்ஸ் 6 போட்டிகளில் வெற்றி பெற்றிருக்க வேண்டும்.
Kuldeep Yadav, Delhi Capitals PlayOffs
கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் கேகேஆர் 7 போட்டிகளில் வெற்றி பெற்று 14 புள்ளிகளுடன் பிளே ஆஃப் சுற்றுக்கு சென்றது. டெல்லி அணிக்கு அதிர்ஷ்டம் இருந்தால் இனி வரும் 4 போட்டிகளிலும் வெற்றி பெற்று பிளே ஆஃப் சுற்றுக்கான ரேஸில் இடம் பெறும்.
Delhi Capitals
அந்த 4 போட்டிகளும் முறையே குஜராத் டைட்டன்ஸ் (அகமதாபாத்), சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (டெல்லி), குஜராத் டைட்டன்ஸ் (டெல்லி), மும்பை இந்தியன்ஸ் (டெல்லி) என்று ஒரு அவே போட்டியிலும், 3 போட்டிகளை ஹோம் மைதானத்திலும் விளையாடுகிறது.
Delhi Capitals, IPL 2024 PlayOffs
ஏற்கனவே ஹோம் மைதானத்தில் (விசாகப்பட்டினம்) சென்னைக்கு எதிராக நடந்த போட்டியில் டெல்லி வெற்றி பெற்றது. அதே போன்று இனி வரும் முதல் 4 போட்டிகளில் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Delhi Capitals Play Off
அப்படி வெற்றி பெற்றால் டெல்லி கேபிடல்ஸ் பிளே ஆஃப் வாய்ப்பு எளிதாகிவிடும். எஞ்சிய 4 போட்டிகளில் 2 போட்டிகளில் வெற்றி பெற்றால் போதுமானது. 3 அல்லது 4 போட்டிகளில் வெற்றி பெற்றாலும் இரட்டிப்பு மகிழ்ச்சி தான். கம்பீரமாக ராஜ நடை போட்டு பிளே ஆஃப் செல்லும்.