திணறிய ராஜஸ்தான் ராயல்ஸ் – வெற்றி தேடி கொடுத்த ஹெட்மயர்: RR த்ரில் வெற்றி!

First Published Apr 13, 2024, 11:33 PM IST

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான 27ஆவது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் 152 ரன்கள் எடுத்து 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

Punjab Kings vs Rajasthan Royals, 27th Match, Mullanpur

ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் தொடரின் 27ஆவது லீக் போட்டி இன்று முல்லன்பூரில் நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சன் பவுலிங் தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 147 ரன்கள் குவித்தது.

Punjab Kings vs Rajasthan Royals

இதில் அதிகபட்சமாக அஷுதோஷ் சர்மா 31 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். பின்னர் எளிய இலக்கை துரத்திய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் தனுஷ் கோடியன் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். முதல் விக்கெட்டிற்கு இந்த ஜோடி 56 ரன்கள் எடுத்தது. இதில் அறிமுக வீரர் தனுஷ் கோடியன் 24 ரன்களில் ஆட்டமிழந்தார்.

PBKS vs RR

யஷஸ்வி ஜெஸ்வால் 39 ரன்களில் வெளியேறினார். அதன் பிறகு வந்த சஞ்சு சாம்சன் 18 ரன்களில் நடையை கட்டினார். ரியான் பராக் 23 ரன்னிலும், துருவ் ஜூரெல் 6 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். கடைசியில் வந்த ரோமன் பவல் 11, கேசவ் மகராஜ் 1 ரன்னில் வெளியேறினர். இறுதியாக கடைசி ஓவரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வெற்றிக்கு 10 ரன்கள் தேவைப்பட்டது. முதல் 2 பந்துகளை அர்ஷ்தீப் சிங் சிறப்பாக வீசினார்.

IPL 27th Match, Punjab Kings

3ஆவது பந்தில் சிக்ஸர் அடிக்கவிட்டார், 4ஆவது பந்தில் 2 ரன்கள் எடுக்கப்பட கடைசி 2 பந்துகளில் 2 ரன்கள் தேவைப்பட்டது. இறுதியாக 5ஆவது பந்தில் ஷிம்ரன் ஹெட்மயர் சிக்ஸர் அடித்து அணியை வெற்றி பெறச் செய்தார். ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 152 ரன்கள் எடுத்து 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

PBKS vs RR, IPL 27th Match

இந்த வெற்றியின் மூலமாக பஞ்சாப் கிங்ஸ் விளையாடிய 6 போட்டிகளில் 2ல் போட்டியில் வெற்றி, 4 தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் 8ஆவது இடம் பிடித்துள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் விளையாடிய 6 போட்டிகளில் 5ல் வெற்றி பெற்று 10 புள்ளிகளுடன் நம்பர் 1 இடத்தில் நீடிக்கிறது.

click me!