எனக்கு புரியல வெரைட்டியா பந்து வீச தெரிஞ்சும் யார்க்கர் மட்டும் வீசுனது தப்பு. நடராஜன் பற்றி பேசிய லட்சுமண்.!

First Published | Nov 19, 2020, 11:11 AM IST

தமிழக வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் தொடர் முழுவதும் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார் யார்க்கர் வீசும் இவரது திறன் அனைவரது கண்களிலும் பட்டது. மேலும் இந்திய அணியில் தேர்வு குழுவினரும் இவரது இந்த திறனால் ஈர்க்கப்பட்டு ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணியில் முதன்முறையாக வாய்ப்பையும் வழங்கியுள்ளனர்.
 

சன் ரைசர்ஸ் அணியின் ஆலோசகருமான லக்ஷ்மணன் கூறுகையில் : எல்லோருக்கும் நடராஜனை ஒரு யார்க்கர் ஸ்பெஷலிஸ்டாக தான் தெரியும். ஆனால் அவரிடம் அதைவிட மேலான ஒரு திறமை இருக்கிறது.
அவரால் ஷார்ப் பவுன்சர், ஆப் கட்டர், ஸ்லோவர் பால், அவுட் சைட் யார்க்கர் என வெரைட்டியாக வீச முடியும். ஏனோ அதனை இந்த ஐபிஎல் தொடரை செய்ய தவறிவிட்டார்
Tap to resize

உதாரணமாக ஆர்சிபி அணியின் ஏ.பி.டி விக்கெட்டை வீழ்த்தியதே அதற்கு சான்று என புகழ்ந்துள்ளார்
புது பந்தில் விக்கெட்டுகளை வீழ்த்தி திறமையும் அவரிடம் உள்ளது. அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐ.பி.எல் தொடரில் இவரால் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியும்
இதுவரை 22 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 18 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது

Latest Videos

click me!