VVS Laxman: இன்னும் 10 ஆண்டுகளுக்கு இந்திய அணியை யாராலயும் அசைக்கவே முடியாது – விவிஎஸ் லட்சுமணன்!

First Published Oct 1, 2024, 8:29 PM IST

VVS Laxman, Indian Cricket Team: இந்திய கிரிக்கெட் அணி அனைத்து வடிவங்களிலும் வலுவாக உள்ளது, அடுத்த 10 ஆண்டுகளுக்கு இந்தியாவின் ஆதிக்கம் தொடரும் என்று விவிஎஸ் லட்சுமணன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். பெஞ்சில் அமர்ந்திருக்கும் வீரர்கள் உட்பட இந்திய அணியின் திறமை குறித்து அவர் பாராட்டினார்.

VVS Laxman

இந்திய அணி தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியாக இருந்தாலும் சரி, டி20 போட்டியாக இருந்தாலும் சரி, ஒருநாள் கிரிக்கெட் போட்டியாக இருந்தாலும் சரி, அனைத்து வடிவங்களிலும் இந்திய அணி வலுவாக உள்ளது. இது தொடர்பாக பிசிசிஐ சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸ் தலைவர் விவிஎஸ் லட்சுமணன் தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

India vs Bangladesh Test Series

டெஸ்ட், டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டி என்று அனைத்து வடிவங்களிலும் இந்திய அணி வலுவாக உள்ளது. இன்னும் 10 ஆண்டுகளுக்கு இந்திய அணியை யாராலயும் அசைக்கவே முடியாது என்று இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் வீரர் விவிஎஸ் லட்சுமணன் கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது: இன்னும் 10 ஆண்டுகளுக்கு இந்திய அணியின் கீழ் சர்வதேச கிரிக்கெட் போட்டி தொடரும். இந்திய அணியில் பலம் வாய்ந்த ஏராளமான வீரர்கள் இருக்கிறார்கள்.

Latest Videos


IND vs BAN Test Series

கடந்த 2021 ஆம் ஆண்டு பிசிசிஐ சென் டர் ஆஃப் எக்ஸலன்ஸ் தலைவராக பொறுப்பேற்றது முதல் பல விதமான குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டது. அதையெல்லாம் கடந்து பணியாற்றுவது என்பது நல்லவித அனுபவத்தை பெற்று தருகிறது. இந்திய அணியில் விளையாடி வரும் வீரர்களைத் தவிர பெஞ்சில் அமர வைக்கப்பட்டுள்ள வீரர்களும் வலிமையானர்கள் தான் என்றார்.

மேலும், இந்திய அணியின் திறமையை பார்ப்பது நல்ல அனுபவத்தை பெற்று தருகிறது. அடுத்த 10 ஆண்டுகளில் சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணி வீரர்கள் தங்களது பலத்தை வெளிப்படுத்துவார்கள். இவ்வளவு ஏன், நாட்டு மக்களை இந்திய வீரர்கள் பெருமைப்படுத்துவார்கள்.

Team India, Indian Cricket Team

ஆண்களைப் போன்று மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகளும் சிறப்பாக விளையாடி வருகின்றனர். மகளிர் டி20 உலகக் கோப்பை தொடர் வரும் 3 ஆம் தேதி பிரம்மாண்டமான தொடக்க விழாவுடன் தொடங்குகிறது. இதுவரையில் நடைபெற்ற 8 மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரில் 6 முறை ஆஸ்திரேலியாவும், ஒரு முறை இங்கிலாந்தும், ஒரு முறை மகளிர் வெஸ்ட் இண்டீஸ் அணியும் டிராபியை கைப்பற்றியுள்ளன.

Womens T20 World Cup 2024

ஆனால், மகளிர் இந்திய அணி ஒரு முறை கூட டிராபியை கைப்பற்றவில்லை என்பது வேதனை அளிக்கிறது என்றார். மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரில் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, வெஸ்ட் இண்டீஸ், நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, இலங்கை என்று 10 அணிகள் இடம் பெற்று விளையாடுகின்றன.

இந்த 10 அணிகளும் குரூப் ஏ மற்றும் குரூப் பி என்று 2 பிரிவுகளாக பிரிந்து விளையாடுகின்றன. இதில் புள்ளிப்பட்டியலில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறும். இதில் வெற்றி பெறும் அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறும். வரும் 20 ஆம் தேதி இறுதிப் போட்டி நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

click me!