ஐபிஎல் 2024 கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் கேகேஆர் அணிக்காக ரூ.24.75 கோடிக்கு ஆஸி., வேகப்பந்து வீச்சாளர் ஏலம் எடுக்கப்பட்டார். ஆனால், அவர் பெரியளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. எனினும் இறுதிப் போட்டியில் 3 ஓவர்கள் வீசி 14 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகள் கைப்பற்றி ஆட்டநாயகன் விருது வென்றார். ஆனாலும், அவரை கேகேஆர் தக்க வைக்குமா, விடுவிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டனான பேட் கம்மின்ஸ் தனது அணியை இறுதிப் போட்டி வரை அழைத்துச் சென்றார். அதோடு, ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் 3 முறை 250 ரன்களுக்கு மேல் குவித்த அணி என்ற சாதனையை ஹைதராபாத் படைத்தது. ஆர்சிபிக்கு எதிராக 287 ரன்கள் குவித்து வரலாற்று சாதனையை படைத்தது. மேலும், மும்பைக்கு எதிராக 277/3 ரன்கள் குவித்தது. டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக 266/7 ரன்கள் குவித்தது. ஆதலால் இந்த முறை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் பேட் கம்மின்ஸ் தக்க வைக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.