விராட் தனது விருப்பமான ஐபிஎல் எதிரணியாக ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியை தேர்வு செய்வார் என எதிர்பார்க்கப்பட்டது ஆனால் அதனை மறுத்துவிட்டார். அதே போன்று தோனி தலைமையிலான சிஎஸ்கே அணியையும் இல்லை என கூறிய அவர்.. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) அணியை தனக்கு பிடித்த எதிரணியாக கிங் கோலி குறிப்பிட்டுள்ளார். ஏப்ரல் 18, 2008 ஆம் ஆண்டு ஆர்சிபி - கேகேஆர் அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் ஐபிஎல் போட்டியில் விராட் பங்கேற்றார். சவுரவ் கங்குலி தலைமையிலான அந்த அணி 222 ரன்கள் குவித்தது. இருப்பினும், இந்த போட்டியில் ஆர்சிபி அணி 82 ரன்களுக்கு சுருண்டு தோல்வியடைந்தது. விராட் 5 பந்துகளில் 1 ரன் எடுத்து ஆட்டமிழந்தார்.