ஆனால் 13 லீக் போட்டிகளிலும் சோபிக்காத கோலி, லீக் சுற்றின் கடைசி போட்டியில் ஆர்சிபி கண்டிப்பாக வெற்றியை எதிர்நோக்கியிருந்த போட்டியில் 54 பந்தில் 8பவுண்டரிகள் மற்றும் 2சிக்ஸர்களுடன் 73 ரன்களை குவித்து ஆர்சிபியின் வெற்றிக்கு உதவினார். முக்கியமான போட்டியில் அதுவும் சேஸிங்கில் அபாரமாக விளையாடி, தான் ஒரு சாம்பியன் பிளேயர் என்பதை நிரூபித்தார் கோலி.