இந்திய பேட்ஸ்மேன்களின் இயலாமையை அம்பலப்படுத்திய உம்ரான் மாலிக்..! இது வருத்தத்திற்குரியது - கவாஸ்கர்

First Published May 20, 2022, 3:27 PM IST

இந்திய இளம் பேட்ஸ்மேன்கள் 140 கிமீ வேகத்திற்கு மேல் வீசப்படும் பந்துகளை எதிர்கொள்ள திணறுகின்றனர் என்பதை உம்ரான் மாலிக் அம்பலப்படுத்தியதாக சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
 

ஐபிஎல் 15வது சீசன் முழுக்க முழுக்க இளம் வீரர்களுக்கான சீசனாக அமைந்தது. குறிப்பாக இளம் ஃபாஸ்ட் பவுலர்களுக்கான சீசனாக அமைந்தது. உம்ரான் மாலிக், மோசின் கான், குல்தீப் சென், யஷ் தயால், பிரசித் கிருஷ்ணா ஆகிய இளம் ஃபாஸ்ட் பவுலர்கள் மிக அருமையாகவும் மிரட்டலான வேகத்திலும் பந்துவீசினர்.
 

குறிப்பாக சன்ரைசர்ஸ் அணியில் ஆடிய உம்ரான் மாலிக் 150 கிமீ வேகத்திற்கு மேல் அசால்ட்டாக வீசி எதிரணி பேட்ஸ்மேன்களை தெறிக்கவிட்டார். இந்த சீசனின் டாப் 2-3 அதிவேக பந்துகள் உம்ரான் மாலிக் வீசியதுதான். 157 கிமீ, 155 கிமீ, 154.9 கிமீ ஆகிய வேகங்களில் உம்ரான் மாலிக் வீசியதுதான் இந்த சீசனின் 3 அதிவேக பந்துகள்.
 

அதிவேகத்தில் வீசுவது மட்டுமல்லாது, அவரது லைன் & லெந்த்தும் துல்லியமாக இருக்கிறது. துல்லியமான லைன்&லெந்த்தில் நல்ல வேகத்தில் வீசுவதால் உம்ரான் மாலிக்கின் பவுலிங், அனுபவ வீரர்களுக்கே சவாலாக இருக்கிறது. அதனால் இளம் பேட்ஸ்மேன்கள் அவரது பவுலிங்கை எதிர்கொள்ள முடியாமல் திணறினர்.

இதுகுறித்து பேசிய சுனில் கவாஸ்கர், வேகப்பந்துவீச்சு எப்போதுமே கவரக்கூடியதுதான். ஆனால் துல்லியத்துடன் கூடிய வேகம் தான், மற்ற ஃபாஸ்ட் பவுலர்களிடமிருந்து உம்ரான் மாலிக்கை வேறுபடுத்தி காட்டுகிறது. மோசின் கான், குல்திப் சென் ஆகிய பவுலர்களும் 150 கிமீ வேகத்தில் வீசுகின்றனர். ஆனால் அவர்கள் உம்ரான் மாலிக்கை போல் துல்லியமான வேகத்தில் வீசுவதில்லை. துல்லியமான லைன் & லெந்த்தில் நல்ல வேகத்தில் வீசினால் கண்டிப்பாக பேட்ஸ்மேன்களுக்கு எதிர்கொள்ள கஷ்டமாகத்தான் இருக்கும்.
 

நிறைய இளம் இந்திய பேட்ஸ்மேன்கள் அதிவேக பந்துவீச்சை எதிர்கொள்ள திணறுகின்றனர் என்பதை இந்த பவுலர்கள் அம்பலப்படுத்தியுள்ளனர். இது இந்திய கிரிக்கெட்டுக்கு சோகமான செய்தி. உள்நாட்டு போட்டிகளில் இந்த இளம் பேட்ஸ்மேன்கள் இவ்வளவு அதிவேக பந்துவீச்சை எதிர்கொள்வதில்லை. அதனால் தரமான ஃபாஸ்ட் பவுலிங்கை எதிர்கொள்ளும்போது திணறுகின்றனர் என்று கவாஸ்கர் கூறியுள்ளார்.
 

click me!