நெட்டில் ஒன்றரை மணி நேரம் விடாமல் பேட் செய்த கோலி..! மொத்த வெறியையும் GT-க்கு எதிராக காட்டிய தரமான சம்பவம்

First Published May 20, 2022, 2:13 PM IST

குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான போட்டியில் இந்த சீசனின் முதல் அரைசதத்தை அடித்து, ஆர்சிபியை வெற்றி பெறச்செய்த விராட் கோலி, அதற்கு முந்தைய நாள் வலைப்பயிற்சியில் ஒன்றரை மணி நேரம் விடாமல் பேட்டிங் செய்து பயிற்சி எடுத்துள்ளார்.
 

கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக ஃபார்மில் இல்லாமல் தவித்துவரும் விராட் கோலி, 2 ஆண்டுகளாக ஒரு சதம் கூட அடிக்கவில்லை. விராட் கோலியின் மோசமான பேட்டிங் இந்திய அணிக்கு கவலையளிக்கும் விதமாக இருந்துவந்த நிலையில், பேட்டிங்கில் கவனம் செலுத்தும் விதமான இந்திய அணியின் கேப்டன்சி மற்றும் ஆர்சிபி அணியின் கேப்டன்சியிலிருந்து கோலி விலகினார்.

எனவே கோலி கேப்டன்சி அழுத்தம் இல்லாமல் வெறும் பேட்ஸ்மேனாக மட்டும் இந்த ஐபிஎல்லில் ஆடியதால் அவர் மீது பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் முதல் 13 போட்டிகளில் ஒரு அரைசதம் கூட கோலி அடிக்கவில்லை. அவரது மோசமான ஃபார்ம் தொடர்ந்துவந்தது. 
 

டி20 உலக கோப்பை நெருங்கிக்கொண்டிருப்பதால் அவரது மோசமான ஃபார்ம் இந்திய் அணிக்கு கவலையளித்தது. எனவே கோலி மீண்டும் ஃபார்முக்கு வர, பல முன்னாள் வீரர்கள் பல அறிவுரைகளை வழங்கிவந்தனர். அதில், கோலி பிரேக் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதுதான் பிரதான அறிவுரையாக இருந்தது.
 

ஆனால் அதையெல்லாம் பொருட்படுத்தாத கோலி, ஒரு நல்ல இன்னிங்ஸுக்காக காத்துக்கொண்டிருந்தார். அந்த இன்னிங்ஸ் குஜராத் டைட்டன்ஸுக்கு எதிராக வந்தது. குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான ஆர்சிபியின் கடைசி லீக் போட்டியில் கட்டாயமாக வெற்றி பெற்றேதீர வேண்டிய கட்டாயத்தில் ஆர்சிபி அணி இறங்கியது.
 

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய குஜராத் அணி 20 ஓவரில் 168 ரன்கள் அடிக்க, 169 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய ஆர்சிபி அணியின் தொடக்க வீரராக இறங்கிய விராட் கோலி தொடக்கம் முதலே அடித்து ஆடி இந்த சீசனில் முதல் அரைசதத்தை பதிவு செய்தார். 54 பந்தில் 8 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 73 ரன்களை குவித்து ஆர்சிபியின் வெற்றிக்கு உதவினார். கோலியின் இந்த இன்னிங்ஸ் ஆர்சிபிக்கு மட்டுமல்லாது இந்திய அணிக்கும் நம்பிக்கையும் உத்வேகமும் அளித்துள்ளது.
 

இந்த போட்டியின் ஆட்டநாயகன் விருதை வென்று பேசிய விராட் கோலி, நான் மிகக்கடுமையாக உழைத்தேன். நேற்று(போட்டிக்கு முந்தைய நாள்) 90 நிமிடங்கள் வலையில் விடாமல் பேட் செய்தேன். அதன்விளைவாக மிகவும் ரிலாக்ஸாக களமிறங்கினேன். ஷமியின் முதல் பந்தை அடித்தபோதே, லெந்த் பந்துகளை ஃபீல்டர்களின் தலைக்கு மேல்(பவர்ப்ளேயில்) அடிக்கமுடியும் என நம்பினேன். இந்த சீசனில் எனக்கு கிடைத்த ஆதரவு மிகச்சிறப்பானது. என் மீது காட்டப்பட்ட அன்பு, இதற்கு முன் நான் பார்த்திராதது என்று கோலி தெரிவித்தார்.
 

click me!