இந்திய அணியின் பயிற்சியாளர் ஆகிறார் விவிஎஸ் லக்‌ஷ்மண்..! ராகுல் டிராவிட்டுக்கு என்ன ஆச்சு..?

First Published May 18, 2022, 7:42 PM IST

ஜூன் இறுதியில் இந்தியா - அயர்லாந்து இடையே நடக்கும் டி20 தொடரில் இந்திய அணியின் பயிற்சியாளராக விவிஎஸ் லக்‌ஷ்மண் செயல்படவுள்ளார்.
 

 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுவதற்காக கடந்த ஆண்டு இந்திய அணி இங்கிலாந்துக்கு சென்றது. ஆனால் 4 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே ஆடியது. கொரோனா அச்சுறுத்தலால் கடைசி போட்டியில் ஆடவில்லை. அந்த போட்டி வரும் ஜூலை 1 முதல் 5 வரை நடக்கவுள்ளது.
 

அதற்கு முன் தயாரிப்பாக முன்கூட்டியே ஜூன் மாத பிற்பாதியில் இங்கிலாந்துக்கு செல்லும் இந்திய அணி கவுண்டி அணியான லீசெஸ்டெர்ஷைர் அணிக்கு எதிராக பயிற்சி போட்டியில் ஆடுகிறது. அதற்காக இந்திய அணியுடன் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் இங்கிலாந்து செல்கிறார்.
 

இதற்கிடையே ஜூன் இறுதியில் இந்தியா  - அயர்லாந்து இடையே டி20 தொடர் நடக்கவுள்ளது. இந்த தொடரில், டெஸ்ட் அணியில் இடம்பெறாத மற்ற வீரர்களை கொண்ட இந்திய அணி ஆடுகிறது. எனவே இந்த தொடருக்கான பயிற்சியாளராக லக்‌ஷ்மண் செயல்படுவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக இருக்கும் லக்‌ஷ்மண், அயர்லாந்து தொடரில் இந்திய அணியின் பயிற்சியாளராக செயல்படுவார் என்று தெரிகிறது.
 

click me!