IPL ஒவ்வொரு சீசனிலும் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தை பிடித்த அணிகளின் பட்டியல்! முதல்முறையாக கடைசி இடத்தில் MI

Published : May 18, 2022, 06:17 PM IST

ஐபிஎல் 15வது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்ட நிலையில், குஜராத் டைட்டன்ஸ் அணி முதல் அணியாக பிளே ஆஃபிற்கு முன்னேறிவிட்டது. மும்பை இந்தியன்ஸ் மற்றும் சிஎஸ்கே ஆகிய 2 சாம்பியன் அணிகளும் முதல் 2 அணிகளாக பிளே ஆஃப் வாய்ப்பை இழந்தது. எஞ்சிய 3 இடங்களுக்கு 5 அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. ஐபிஎல்லில் இந்த சீசனில் புள்ளி பட்டியலில் முதல் முறையாக கடைசி இடத்தை பிடித்துள்ளது மும்பை இந்தியன்ஸ். ஒவ்வொரு சீசனிலும் எந்த அணி புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் முடித்தது என்ற பட்டியலை பார்ப்போம்.  

PREV
115
IPL ஒவ்வொரு சீசனிலும் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தை பிடித்த அணிகளின் பட்டியல்! முதல்முறையாக கடைசி இடத்தில் MI

1. 2008 ஐபிஎல் - டெக்கான் சார்ஜர்ஸ் (4 புள்ளிகள்)

ஐபிஎல் தொடங்கப்பட்ட முதல் சீசனில் ஆடம் கில்கிறிஸ்ட் தலைமையிலான டெக்கான் சார்ஜர்ஸ் அணி வெறும் 4 புள்ளிகளை மட்டுமே பெற்று புள்ளி பட்டியலில் கடைசி இடத்தை பிடித்தது. அடுத்த சீசனில் அந்த அணி தான் கோப்பையை வென்றது என்பது குறிப்பிடத்தக்கது. 
 

215

2. 2009 ஐபிஎல் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (7 புள்ளிகள்)

2009 ஐபிஎல்லில் கேகேஆர் அணி புள்ளி பட்டியலில் கடைசி இடத்தை பிடித்தது. 

315

3. 2010 ஐபிஎல் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் (8 புள்ளிகள்)

ஐபிஎல் 3வது சீசனில் பஞ்சாப் அணிபுள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் இருந்தது.

415

4. 2011 ஐபிஎல் - டெல்லி டேர்டெவில்ஸ் (9 புள்ளிகள்)

ஐபிஎல் 4வது சீசனில் டெல்லி டேர்டெவில்ஸ் அணி மோசமாக ஆடி புள்ளி பட்டியலில் கடைசி இடம் பிடித்தது. 

515

5. 2012 ஐபிஎல் - புனே வாரியர்ஸ் இந்தியா (8 புள்ளிகள்)

ஐபிஎல் 5வது சீசனில் கங்குலி தலைமையிலான புனே அணி புள்ளி பட்டியலில் கடைசி இடத்தை பிடித்தது. 
 

615

6. 2013 ஐபிஎல் - டெல்லி டேர்டெவில்ஸ் (6 புள்ளிகள்)

ஐபிஎல் 6வது சீசனில் 2வது முறையாக டெல்லி அணி புள்ளி பட்டியலில் கடைசி இடம் பிடித்தது. 

715

7. 2014 ஐபிஎல் - டெல்லி டேர்டெவில்ஸ் (4 புள்ளிகள்)

ஐபிஎல் 7வது சீசனில் 3வது முறையாக புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் இருந்தது டெல்லி டேர்டெவில்ஸ் அணி.

815

8. 2015 ஐபிஎல் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் (6 புள்ளிகள்)

ஐபிஎல் 8வது சீசனில் பஞ்சாப் அணி மீண்டும் கடைசி இடம்.

915

9. 2016 ஐபிஎல் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் (8 புள்ளிகள்)

9வது சீசனிலும் பஞ்சாப் அணி தான் கடைசி இடம் பிடித்தது. 

1015

10. 2017 ஐபிஎல் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (7 புள்ளிகள்)

ஐபிஎல் 10வது சீசனில் கோலி தலைமையிலான ஆர்சிபி அணி புள்ளி பட்டியலில் கடைசி இடம் பிடித்தது. இதே ஆண்டுதான் கோலி இந்திய அணியின் கேப்டன்சியை ஏற்றார். 

1115

11. 2018 ஐபிஎல் - டெல்லி டேர்டெவில்ஸ் (10 புள்ளிகள்)

டெல்லி அணி 11வது சீசனில் 4வது முறையாக புள்ளி பட்டியலில் கடைசி இடம். 

1215

12. 2019 ஐபிஎல் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (11 புள்ளிகள்)

ஆர்சிபி அணி 2 வது முறையாக புள்ளி பட்டியலில் கடைசி இடம் பிடித்தது. 

1315

13. 2020 ஐபிஎல் - ராஜஸ்தான் ராயல்ஸ் (12 புள்ளிகள்)

2020 ஐபிஎல்லில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதல் முறையாக புள்ளி பட்டியலில் கடைசி இடம் பிடித்தது. 

1415

14. 2021 ஐபிஎல் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (6 புள்ளிகள்)

2021 ஐபிஎல்லில் சன்ரைசர்ஸ் அணி படுமோசமாக ஆடி கடைசி இடம் பிடித்தது.

1515

15. 2022 ஐபிஎல் - மும்பை  இந்தியன்ஸ்

 5 முறை ஐபிஎல் சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி முதல் முறையாக இந்த சீசனில் புள்ளி பட்டியலில் கடைசி இடம் பிடித்தது

Read more Photos on
click me!

Recommended Stories