ஐபிஎல்லில் சன்ரைசர்ஸ் அணிக்காக ஆடிவரும் ராகுல் திரிபாதி, இதற்கு முன் கேகேஆர் அணிக்காக ஆடியபோதும் சரி, இப்போது சன்ரைசர்ஸுக்காக ஆடும்போது சரி, அபாரமாக பேட்டிங் ஆடி ஸ்கோர் செய்துவருகிறார். கேகேஆர் அணியில் அபாரமாக ஆடிவந்த திரிபாதியை அந்த அணி விடுவிக்க, 15வது சீசனுக்கான மெகா ஏலத்தில் சன்ரைசர்ஸ் அணி அவரை ஏலத்தில் எடுத்தது.