18 வருடங்களாக ஒரே அணி – கோலியின் ஜெர்சி நம்பரும் 18, சீசனும் 18; இது கடவுளால் விதிக்கப்பட்டது!

Published : Jun 04, 2025, 09:05 AM IST

Virat Kohli 18 Number RCB Champion : 18 வருடங்களாக ஒரே அணிக்காக விளையாடி வரும் விராட் கோலியின் ஜெர்சி நம்பரும் 18, ஐபிஎல் 2025 சீசனும் 18 எனும் போது இப்போது முதல் முறையாக டிராபி வென்று சாதனை படைத்துள்ளது.

PREV
15
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

Virat Kohli 18 Number RCB Champion : 18 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது ஐபிஎல் டிராபியை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கான இறுதிப் போட்டி நேற்று அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்றது. இதில், முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 190 ரன்கள் எடுத்தது. இந்தப் போட்டியில் விராட் கோலி மட்டுமே அதிகபட்சமாக 43 ரன்கள் எடுத்தார்.

25
பஞ்சாப் கிங்ஸ்

பின்னர் 191 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்ட பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு ஷஷாங்க் சிங் மட்டுமே கடைசி வரை போராடி 61 ரன்கள் எடுத்துக் கொடுத்தார். மற்ற வீரர்கள் யாரும் நீண்ட நேரம் தாக்குப்பிடிக்கவில்லை. எப்படியும் இந்த முறை பஞ்சாப் கிங்ஸ் டிராபியை வென்றுவிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 6 ரன்கள் வித்தியாசத்தில் டிராபியை கோட்டைவிட்டது. 2ஆவது முறையாக பஞ்சாப் கிங்ஸ் இறுதிப் போட்டிக்கு வந்த நிலையில் இந்த முறை தோல்வி அடைந்து வெளியேறியது.

35
18 ஆண்டுகளாக விராட் கோலி மட்டுமே ஒரே அணிக்காக விளையாடி வருகிறார்

ஐபிஎல் தொடர் தொடங்கியது முதல் 18 ஆண்டுகளாக விராட் கோலி மட்டுமே ஒரே அணிக்காக விளையாடி வருகிறார். சில ஆண்டுகள் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு கேப்டனாகவும் இருந்துள்ளார். ஆர்சிபிக்காக 282 போட்டிகளில் விளையாடிய கோலி 9085 ரன்கள் எடுத்துள்ளார். இதில், 8 சதங்கள், 65 அரைசதங்கள் அடங்கும்.

45
முதல் முறையாக டிராபியை வென்று சாதனை

ஒரு முறை கூட ஐபிஎல் டிராபியை கைப்பற்றாத அணி என்ற மோசமான சாதனையை ஆர்சிபி பெற்றிருந்தது. என்ன தான் ஆர்சிபி டிராபியை கைப்பற்றவில்லை என்றாலும் கூட ரசிகர்களின் ஆதரவிற்கும் மட்டும் குறைவில்லை. தொடர்ந்து ஆர்சிபிக்காக ரசிகர்கள் ஆதரவு தெரிவித்து வந்தனர். ரசிகர்களின் ஆதரவிற்காக இன்று முதல் முறையாக ஆர்சிபி டிராபியை வென்று கொடுத்துள்ளது. தோல்வி, கேலி, கிண்டல்களுக்கு மத்தியில் தொடர்ந்து போராடி வந்த ஆர்சிபி இப்போது முதல் முறையாக டிராபியை வென்று சாதனை படைத்துள்ளது.

55
கிறிஸ் கெயில், ஏபிடிவிலியர்ஸ்

ஆர்சிபியின் இந்த சாதனைக்கு முன்னாள் வீரர்களான கிறிஸ் கெயில், ஏபிடிவிலியர்ஸ் ஆகியோர் உள்பட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதில் என்ன ஆச்சரியம் என்றால் கிறிஸ் கெயில் மற்றும் ஏபி டிவிலியர்ஸ் ஆகியோர் உடன் இணைந்து விராட் கோலி டிராபியை ஐபிஎல் டிராபியை தங்களது கைகளில் தூக்கி சுமந்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்களும், வீடியோ காட்சிகளும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories