ஐபிஎல் 2025 பரிசுத்தொகை: ஆர்சிபி, பஞ்சாப் அணிகளுக்கு எவ்வளவு?

Published : Jun 04, 2025, 05:19 AM IST

IPL 2025 Prize Money : ஐபிஎல் 2025 இறுதிப் போட்டியில் ஆர்சிபி அணி பஞ்சாப் கிங்ஸை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. வெற்றி பெற்ற மற்றும் தோல்வியடைந்த அணிகளுக்கு எவ்வளவு பரிசுத்தொகை கிடைத்தது என்பது குறித்து பார்க்கலாம்.

PREV
111
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

IPL 2025 Prize Money : ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது முதல் முறையாக டிராபியை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. ஆர்சிபி அணியின் 18 ஆண்டுகால போராட்டத்திற்கும், வலிக்கும் கிடைத்த முதல் பரிசாக ஐபிஎல் 2025 தொடரின் 18ஆவது சீசன் அமைந்துள்ளது. பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான முதல் தகுதிச் சுற்று போட்டியில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு வந்த ஆர்சிபி இன்று இறுதிப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி முதல் முறையாக டிராபியை கைப்பற்றியுள்ளது. 6ஆவது அணியாக ஐபிஎல் 2025 டிராபியை கைப்பற்றியிருக்கிறது.

211
பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் பவுலிங் தேர்வு

டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் பவுலிங் தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 190 ரன்கள் குவித்தது. இதில் அதிகபட்சமாக விராட் கோலி மட்டுமே 43 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். பின்னர் 191 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு பஞ்சாப் கிங்ஸ் விளையாடியது.

311
ஷ்ரேயாஸ் ஐயர் 1 ரன்

இதில், பிரியன்ஷ் ஆர்யா மற்றும் பிராப்சிம்ரன் சிங் இருவரும் இணைந்து அதிரடியாக தொடங்கினர். எனினும் ஆர்யா 24 ரன்களில் ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து பிராப்சிம்ரன் சிங்கும் 26 ரன்களில் வெளியேறினார். அதன் பிறகு வந்த கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் 1 ரன்களில் ஆட்டமிழந்தது தான் போட்டியில் திருப்பு முனையை ஏற்படுத்தியது.

411
ஷஷாங்க சிங் 61 ரன்கள் எடுத்தார்

கடைசி வரை போராடிய ஷஷாங்க சிங் 61 ரன்கள் எடுத்தார். போட்டியின் கடைசி ஓவரில் பஞ்சாப் கிங்ஸ் வெற்றிக்கு 29 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் அந்ஹ ஓவரை ஜோஷ் ஹேசில்வுட் வீசினார். இதில் முதல் 2 பந்துகளில் ஒரு ரன் கூட எடுக்கப்படவில்லை. இதுதான் ஆர்சியின் வெற்றியை உறுதி செய்தது. இறுதியாக பஞ்சாப் கிங்ஸ் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 184 ரன்கள் எடுத்து 6 ரன்கள் வித்தியாசத்தில் டிராபியை கோட்டைவிட்டது.

511
ஐபிஎல் கிரிக்கெட் வாலாற்றில் முதல் முறையாக

இதன் மூலமாக ஐபிஎல் கிரிக்கெட் வாலாற்றில் முதல் முறையாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஐபிஎல் 2025 டிராபியை தங்களுக்கு சொந்தமாக்கியது. 18 ஆண்டுகளாக ஒரு அணி டிராபியை கைப்பற்றவில்லை என்றால் எவ்வளவு கஷ்டங்களையும், வலியையும் கடந்து வந்திருக்கும் என்பது முதல் முறையாக டிராபியை கைப்பற்றும் போது தான் தெரியவரும்.

611
18 வருட தவம் - ஐபிஎல் 2025

அப்படியொரு வலியைத் தான் ஆர்சிபி கடந்து வந்து இப்போது ஈ சாலா கப் நமதே என்று சொல்லும் அளவிற்கு கடைசியில் டிராபியை சொந்தமாக்கி கொண்டது. ஆர்சிபி அணியில் எத்தனையோ கேப்டன் மாற்றப்பட்டிருந்தாலும் இறுதியாக ரஜத் படிதார் தலைமையிலான ஆர்சிபி முதல் முறையாக டிராபியை கைப்பற்றி பெங்களூரு ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

711
கோலியின் ஜெர்சி நம்பர் 18

இந்த ஐபிஎல் 2025 டிராபிக்கும் விராட் கோலிக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது. விராட் கோலியின் ஜெர்சி நம்பர் 18. இந்த சீசன் 18ஆவது ஐபிஎல் 2025 தொடர். இந்த 18ஆவது ஐபிஎல் தொடரில் ஆர்சிபி தங்களது முதல் டிராபியை தட்டி தூக்கியிருக்கிறது.

811
ஆர்சிபி அணிக்கு ரூ.20 கோடி பரிசுத்தொகை

இந்த நிலையில் தான் ஐபிஎல் 2025 தொடரில் சாம்பியனான ஆர்சிபி அணிக்கு ரூ.20 கோடி பரிசுத்தொகையும், இரண்டாம் இடம் பிடித்த பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு ரூ.12.5 கோடி பரிசுத்தொகையும் வழங்கப்பட்டது. ஆனால், முதல் சீசனின் போது சாம்பியன் பட்டம் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு ரூ.4.8 கோடி பரிசுத்தொகையும், இரண்டாம் இடம் பிடித்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ரூ.2.4 கோடி பரிசுத்தொகையும் வழங்கப்பட்டது. தற்போது பரிசுத்தொகை நான்கு மடங்கு அதிகரித்துள்ளது.

911
பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்ற அணிகளுக்கு எவ்வளவு பரிசுத்தொகை?

பிளே ஆஃப் சுற்றில் இருந்து வெளியேறிய குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு ரூ.6.5 கோடியும், குவாலிஃபையர் 2 சுற்றில் தோல்வியடைந்த மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ரூ.7 கோடியும் வழங்கப்பட்டது.

1011
ஆரஞ்சு, பர்பிள் கேப் வென்றவர்களுக்கு எவ்வளவு பரிசுத்தொகை?

ஆரஞ்சு தொப்பியை வென்ற சாய் சுதர்ஷனுக்கும், ஊதா தொப்பியை வென்ற பிரசித் கிருஷ்ணாவுக்கும் தலா ரூ.10 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்பட்டது.

1111
எமர்ஜிங் பிளேயர் ஆஃப் தி சீசன் விருதுக்கு எவ்வளவு பரிசுத்தொகை?

சிறப்பாக செயல்பட்ட இளம் வீரருக்கான ‘எமர்ஜிங் பிளேயர் ஆஃப் தி சீசன்’ விருதை சாய் சுதர்ஷன் வென்றார். அவருக்கு ரூ.10 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்பட்டது.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories