18 வருட தாகம் தீர்த்த ஆர்சிபி – முதல் முறையாக ஐபிஎல் 2025 டிராபி கைப்பற்றி சாதனை!

Published : Jun 03, 2025, 11:49 PM ISTUpdated : Jun 03, 2025, 11:53 PM IST

RCB become Champion in IPL 2025 : பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் 2025 இறுதிப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல் முறையாக டிராபியை கைப்பற்றியுள்ளது.

PREV
18
விராட் கோலி, ஐபிஎல் 2025

RCB become Champion in IPL 2025 : ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது முதல் முறையாக டிராபியை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. ஆர்சிபி அணியின் 18 ஆண்டுகால போராட்டத்திற்கு வலிக்கும் கிடைத்த முதல் மகுடமாக ஐபிஎல் 2025 தொடரின் 18ஆவது சீசன் அமைந்துள்ளது. பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான முதல் தகுதிச் சுற்று போட்டியில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு வந்த ஆர்சிபி இன்று இறுதிப் போட்டியில் அதே பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொண்டது.

28
ஐபிஎல் 2025 18ஆவது சீசன்

டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் பவுலிங் தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 190 ரன்கள் குவித்தது. இதில் அதிகபட்சமாக விராட் கோலி மட்டுமே 43 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

38
18 ஆண்டுகளுக்கு பிறகு ஆர்சிபி சாம்பியன்

பவுலிங்கைப் பொறுத்த வரையில் பஞ்சாப் கிங்ஸ் அணியில் அர்ஷ்தீப் சிங் மற்றும் கைல் ஜேமிசன் தலா 3 விக்கெட்டுகள் கைப்பற்றினர். பின்னர் 191 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு பஞ்சாப் கிங்ஸ் விளையாடியது.

இதில், பிரியன்ஷ் ஆர்யா மற்றும் பிராப்சிம்ரன் சிங் இருவரும் இணைந்து அதிரடியாக தொடங்கினர். எனினும் ஆர்யா 24 ரன்களில் ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து பிராப்சிம்ரன் சிங்கும் 26 ரன்களில் வெளியேறினார். அதன் பிறகு வந்த கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் 1 ரன்களில் ஆட்டமிழந்தது தான் போட்டியில் திருப்பு முனையை ஏற்படுத்தியது.

48
ஆர்சிபி - பஞ்சாப் கிங்ஸ் ஐபிஎல் இறுதிப் போட்டி

அதிரடியாக விளையாடிக் கொண்டிருந்த ஜோஷ் இங்கிலிஸூம் 39 ரன்களில் ஆட்டமிழந்தார். நேஹல் வதேரா 15 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க கடைசி வரை போராடிய ஷஷாங்க சிங் 61 ரன்கள் எடுத்தார். போட்டியின் கடைசி ஓவரில் பஞ்சாப் கிங்ஸ் வெற்றிக்கு 29 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் அந்ஹ ஓவரை ஜோஷ் ஹேசில்வுட் வீசினார். இதில் முதல் 2 பந்துகளில் ஒரு ரன் கூட எடுக்கப்படவில்லை. இதுதான் ஆர்சியின் வெற்றியை உறுதி செய்தது.

58
ஐபிஎல் 2025 - ஆர்சிபி சாம்பியன்

3 ஆவது, 5ஆவது மற்றும் கடைசி பந்தில் ஷஷாங்க் சிங் சிக்ஸர் அடித்தார். 5ஆவது பந்தில் பவுண்டரி அடித்தார். இதன் மூலமாக அந்த ஓவரில் மொத்தமாக 22 ரன்கள் மட்டுமே எடுக்கப்பட்டது. இறுதியாக பஞ்சாப் கிங்ஸ் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 184 ரன்கள் எடுத்து 6 ரன்கள் வித்தியாசத்தில் டிராபியை கோட்டைவிட்டது.

68
18 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக சாம்பியனான ஆர்சிபி

இதன் மூலமாக ஐபிஎல் கிரிக்கெட் வாலாற்றில் முதல் முறையாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஐபிஎல் 2025 டிராபியை தங்களுக்கு சொந்தமாக்கியது. 18 ஆண்டுகளாக ஒரு அணி டிராபியை கைப்பற்றவில்லை என்றால் எவ்வளவு கஷ்டங்களையும், வலியையும் கடந்து வந்திருக்கும் என்பது முதல் முறையாக டிராபியை கைப்பற்றும் போது தான் தெரியவரும்.

78
ஈசாலா கப் நமதே - முதல் முறையாக சாம்பியனான ஆர்சிபி

அப்படியொரு வலியைத் தான் ஆர்சிபி கடந்து வந்து இப்போது ஈ சாலா கப் நமதே என்று சொல்லும் அளவிற்கு கடைசியில் டிராபியை சொந்தமாக்கி கொண்டது. ஆர்சிபி அணியில் எத்தனையோ கேப்டன் மாற்றப்பட்டிருந்தாலும் இறுதியாக ரஜத் படிதார் தலைமையிலான ஆர்சிபி முதல் முறையாக டிராபியை கைப்பற்றி பெங்களூரு ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

88
விராட் கோலி ஜெர்சி நம்பர் 18

இந்த ஐபிஎல் 2025 டிராபிக்கும் விராட் கோலிக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது. விராட் கோலியின் ஜெர்சி நம்பர் 18. இந்த சீசன் 18ஆவது ஐபிஎல் 2025 தொடர். இந்த 18ஆவது ஐபிஎல் தொடரில் ஆர்சிபி தங்களது முதல் டிராபியை தட்டி தூக்கியிருக்கிறது.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories