Champions Trophy 2025: இந்திய அணிக்கு அதிர்ச்சி ; கோலிக்கு காயம்; ஃபைனலில் விளையாடுவாரா?

Published : Mar 08, 2025, 10:40 PM IST

Virat Kohli Injured During Practice Session in Champions Trophy 2025 : சாம்பியன்ஸ் டிராபி 2025 இறுதிப் போட்டி நாளை 9ஆம் தேதி நடைபெறும் நிலையில் இந்திய அணிக்கு அதிர்ச்சி செய்தியாக விராட் கோலிக்கு காயம் ஏற்பட்டுள செய்தி வெளியாகி வருகிறது.

PREV
14
Champions Trophy 2025: இந்திய அணிக்கு அதிர்ச்சி ; கோலிக்கு காயம்; ஃபைனலில் விளையாடுவாரா?

Virat Kohli Injured Shokcing News For Team India, Champions Trophy 2025: இந்தியா, நியூசிலாந்து இடையே நடக்கவிருக்கும் சாம்பியன்ஸ் டிராபி 2025 இறுதிப் போட்டிக்கு இன்னும் சில மணி நேரங்களே உள்ளன. ஆனால், அதற்கு முன்பே இந்திய அணிக்கு பெரிய ஆபத்து இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. பல ஊடக அறிக்கைகளின்படி, இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் இறுதிப் போட்டியில் விளையாடமாட்டார். அவர்தான் விராட் கோலி.

சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டிக்கு முன் விராட் கோலி காயம் அடைந்தார். இந்த செய்தி இப்போது சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்திய ரசிகர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர். மார்ச் 9ஆம் தேதி நடைபெறும் இந்தியா-நியூசிலாந்து ஐசிசி கோப்பைக்கான போட்டியில் விராட் கோலி விளையாடுவாரா என்பதுதான் அனைவரின் மனதிலும் உள்ள கேள்வி.

24
Virat Kohli Injury Update News

விராட் கோலிக்கு எப்படி காயம் ஏற்பட்டது? 

சாம்பியன்ஸ் டிராபி 2025 இந்தியா-இங்கிலாந்து இறுதிப் போட்டிக்கு முன் இரு அணிகளும் தீவிரமாக பயிற்சி செய்து வருகின்றன. இரண்டு அணிகளும் போட்டி நடைபெறும் துபாய் மைதானத்தில் வெற்றி பெற பயிற்சி செய்து வியர்வை சிந்துகின்றன. இந்திய அணியும் இறுதிப் போட்டிக்காக தீவிரமாக பயிற்சி செய்து வருகிறது. இந்த நிலையில் விராட் கோலிக்கு காயம் ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த செய்திகள் இந்திய அணி மட்டுமின்றி கிரிக்கெட் ரசிகர்களையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. பல ஊடக அறிக்கைகளின்படி, கிங் கோலி பயிற்சி செய்யும் போது, அதாவது பேட்டிங் செய்யும் போது காயம் அடைந்தார். அதன் பிறகு கோலி சிகிச்சை பெற்றார். 

34
Virat Kohli Injury In Practice Session

கவலையில் கிரிக்கெட் ரசிகர்கள்! 

தொடர்புடைய ஊடக அறிக்கைகளின்படி, பேட்டிங் பயிற்சி செய்யும் போது வேகமாக வீசப்பட்ட பந்து விராட் கோலியின் முழங்காலில் பட்டது. இதனால் உடனடியாக பயிற்சியை நிறுத்தினார். பின்னர் அவருக்கு ஓய்வு கொடுத்து சிகிச்சை அளிக்கப்பட்டது. ஐசிசி கிரிக்கெட் அகாடமியில் கோலியை இந்திய அணி பிசியோதெரபிஸ்டுகள் கவனித்துக் கொண்டனர். விராட் நீண்ட நேரம் பயிற்சிக்கு திரும்பவில்லை. இருப்பினும், பின்னர் இந்திய வீரர்களின் பயிற்சியை கோலி பார்த்துக் கொண்டிருந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் முழங்கால் வலி காரணமாக கோலி அணியை விட்டு வெளியேற வேண்டியதாயிற்று. இப்போது முக்கியமான ஐசிசி கோப்பை இறுதிப் போட்டிக்கு முன் கோலிக்கு ஏற்பட்ட காயம் இந்திய அணியில் கவலையை அதிகரித்துள்ளது.

44
Virat Kohli Injury

சாம்பியன்ஸ் டிராபி 2025 இந்தியா vs நியூசிலாந்து இறுதிப் போட்டியில் கோலி விளையாடுவாரா?

சாம்பியன்ஸ் டிராபி 2025ல் விராட் கோலி மீண்டும் ஃபார்முக்கு வந்துள்ளார். இந்திய அணியின் வெற்றிகளில் முக்கிய பங்கு வகித்துள்ளார். அரையிறுதியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்திய அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்து 84 ரன்கள் எடுத்தார். இந்த போட்டிக்கு முன் பாகிஸ்தானுக்கு எதிராக ஒரு அற்புதமான சதம் அடித்தார். இந்திய அணிக்கு வெற்றியை தேடி தந்தார். சாம்பியன்ஸ் டிராபி 2025ல் அதிக ரன்கள் எடுத்தவர்களில் ஒருவராக உள்ளார். 

இப்போது கோலிக்கு ஏற்பட்ட காயம் இந்திய அணியை கவலையில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் கவலை அதிகரித்துள்ளது. இருப்பினும், விராட் கோலிக்கு ஏற்பட்ட காயம் அவ்வளவு பெரியது இல்லை என்று பல அறிக்கைகள் தெரிவிக்கின்றன. மேலும், விராட் கோலி இறுதிப் போட்டிக்கு முழு உடற்தகுதியுடன் இருப்பதாகவும், போட்டியில் கண்டிப்பாக விளையாடுவார் என்றும் கூறப்படுகிறது. இருப்பினும், பிசிசிஐ அல்லது இந்திய அணி கோலியின் காயம் குறித்து எந்த அறிக்கையும் வெளியிடாததால் கிரிக்கெட் ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர். 

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories