சச்சினின் சதம் சாதனையை முறியடித்த கிங் கோலி!

First Published Jan 11, 2023, 10:43 AM IST

இலங்கைக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் சதம் அடித்த விராட் கோலி சச்சினின் சதம் சாதனையை முறியடித்துள்ளார்.

முதல் ஒரு நாள் போட்டி:

டி20 தொடரை இழந்த இலங்கை அணி தற்போது 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் ஒரு நாள் போட்டி நேற்று கவுகாத்தி மைதானத்தில் நடந்தது. இதில், டாஸ் வென்ற இலங்கை அணி பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய இந்தியா 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 373 ரன்கள் எடுத்தது.
 

373 ரன்கள்

இதைத் தொடர்ந்து 373 ரன்களை வெற்றி இலக்காக கொண்ட இலங்கை அணிக்கு பதும் நிசாங்கா 72 ரன்களும், கேப்டன் தசுன் ஷனாகா 106 ரன்களும் (நாட் அவுட்) எடுக்க இலங்கை அணி 50 ஓவர்கள் முடிவில் 306 ரன்கள் எடுத்து 67 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
 

விராட் கோலி சதம்:

இந்தப் போட்டியில் கோலி பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். ஒரு அணிக்கு எதிராக அதிக சதங்கள் அடித்த சச்சினின் சாதனையை கோலி முறியடித்துள்ளார். இந்தப் போட்டியில் விராட் கோலி தனது 45ஆவது சதத்தை பூர்த்தி செய்துள்ளார். 87 பந்துகளில் ஒரு சிக்சர் 12 பவுண்டரிகள் உள்பட 113 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

ஒரு அணிக்கு எதிராக விராட் கோலி அடித்த சதங்கள்:

ஒரு அணிக்கு எதிராக விராட் கோலி அடித்த சதங்கள்:

வெஸ்ட் அணிக்கு எதிராக - 9 சதங்கள்
இலங்கை அணிக்கு எதிராக - 9 சதங்கள்
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக - 8 சதங்கள்

ரோகித் சர்மா - ஆஸ்திரேலியாவுக்கு எதிராக - 8 சதங்கள்

சச்சின் டெண்டுல்கர் - ஆஸ்திரேலியாவுக்கு எதிராக - 9 சதங்கள்

சச்சின் டெண்டுல்கர் - இலங்கைக்கு எதிராக - 8 சதங்கள்
 

ஒரு நாட்டில் அதிக முறை சதங்கள் அடித்தவர்கள்:

இந்தியாவில் நடந்த 99 போட்டிகளில் விராட் கோலி 20 சதம் அடித்துள்ளார். 160 போட்டிகளில் சச்சின் டெண்டுல்கர் 20 சதம் அடித்துள்ளார். இதே போன்று தென் ஆப்பிரிக்காவின் ஹசீம் ஆம்லா 69 போட்டிகளில் 14 சதங்களும், ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங் 151 போட்டிகளில் 14 சதங்களும் அடித்துள்ளனர்.

விராட் கோலி - 20 சதம் (99 போட்டி)

சச்சின் டெண்டுல்கர் - 20 சதம் (160 போட்டி)

ஹசீம் ஆம்லா - 14 சதம் (69 போட்டி)

ரிக்கி பாண்டிங் - 14 சதம் (151 போட்டி)

ஒரு அணிக்கு எதிராக 300 ரன்களுக்கு மேல் எத்தனை முறை ஒரு அணி எடுத்துள்ளது?

ஒரு அணிக்கு எதிராக 300 ரன்களுக்கு மேல் எத்தனை முறை ஒரு அணி எடுத்துள்ளது?

இந்தியாவுக்கு எதிராக நடந்த ஒரு நாள் போட்டிகளில் 28 முறை ஆஸ்திரேலியா 300 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளது.

இலங்கைக்கு எதிரான போட்டிகளில் 22 முறை 300 ரன்களுக்கு மேல் இந்தியா குவித்துள்ளது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டிகளில் 21 முறை இந்தியா 300 ரன்களுக்கு மேல் குவித்துள்ளது.

இங்கிலாந்துக்கு எதிரான போட்டிகளில் 18 முறை இந்தியா 300 ரன்களுக்கு மேல் குவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 

ODI - ஒரு அணிக்கு எதிராக விராட் கோலி எடுத்த ரன்கள்:

இலங்கை - 2264 ரன்கள் 

வெஸ்ட் இண்டீஸ் -  2261 ரன்கள் 

ஆஸ்திரேலியா - 2083 ரன்கள்

தென் ஆப்பிரிக்கா - 1403 ரன்கள்

click me!