இலங்கைக்கு எதிரான ஒரு நாள் போட்டிகளில் கவனிக்க வேண்டிய 7 முக்கியமான வீரர்கள்!

Published : Jan 10, 2023, 10:08 AM IST

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 3 ஒரு நாள் போட்டிகளில் பங்கேற்கிறது. ஒரு நாள் தொடரில் இடம் பெற்றுள்ள வீரர்களில் முக்கியமாக கவனிக்க வேண்டியவர்கள் கே எல் ராகுல், விராட் கோலி, ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், உம்ரான் மாலிக் மற்றும் ஜஸ்ப்ரித் பும்ரா.

PREV
18
இலங்கைக்கு எதிரான ஒரு நாள் போட்டிகளில் கவனிக்க வேண்டிய 7 முக்கியமான வீரர்கள்!
முதல் ஒரு நாள் போட்டி

இந்தியா வந்துள்ள இலங்கை அணி 1-2 என்ற கணக்கில் டி20 தொடரை இழந்த நிலையில், 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இந்த தொடரின் முதல் ஒரு நாள் போட்டி கவுகாத்தி மைதானத்தில் பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்குகிறது. இந்த தொடருக்கு ரோகித் சர்மா கேப்டனாகவும், ஹர்திக் பாண்டியா துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே ஒரு நாள் தொடரில் இடம் பெற்ற பும்ரா, பின்னர் அதிரடியாக அணியிலிருந்து நீக்கப்பட்டார். இந்த நிலையில், 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் கவனிக்க வேண்டிய முக்கியமான 7 வீரர்கள் யார் யார் என்று இங்கு காணலாம்.

28
கே எல் ராகுல்:

இந்தப் போட்டியில் சுப்மன் கில், இஷான் கிஷான் மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் தொடக்க வீரர்கள். இதன் காரணமாக கே எல் ராகுல் 5 ஆவதாக களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன்னதாக நடந்த 13 ஒரு நாள் போட்டிகளில் ராகுல் 5ஆவதாக களமிறங்கி 548 ரன்கள் எடுத்துள்ளார். இதில் ஒரு சதமும், 5 அரைசதமும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

38
விராட் கோலி:

இதுவரை ஒரு சில போட்டிகளில் மட்டும் சிறப்பாக விளையாடிய விராட் கோலி இந்தப் போட்டியின் மூலம் தனது ரன் மெஷினை தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

48
ரோகித் சர்மா:

ரோகித் சர்மா மீண்டும் தனது பழைய ஆட்டத்தை ஆரம்பிக்க வேண்டும் என்று ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். 2023 ஆம் ஆண்டு உலககோப்பைக்கு முக்கியமானவர் ஹிட்மேன் ரோகித் சர்மா என்பது குறிப்பிடத்தக்கது.

58
சூர்யகுமார் யாதவ்:

டி20 போட்டியில் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தக் கூடியவர் சூர்யகுமார் யாதவ். ஆனால், ஒரு நாள் போட்டிகளில் இன்னும் அவர் தனது ஆட்டத்தை காண்பிக்கவில்லை என்பது ரசிகர்களின் வருத்தமாக திகழ்கிறது. 12 ஒரு நாள் போட்டிகளில் வெறும் 260 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இதில், ஒரு அரை சதம் அடங்கும். இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் ஒரு நாள் போட்டியில் சூர்யகுமார் யாதவ் இடம் பெறுவாரா? என்பது சந்தேகம் தான்.

68
ஷ்ரேயாஸ் ஐயர்:

கடந்த 2022 ஆம் ஆண்டுகளில் எல்லா போட்டிகளிலும் ஆட்டநாயகன் விருது பெற்றவர் ஷ்ரேயாஸ் ஐயர். கடந்த ஆண்டு நடந்த ஒரு நாள் போட்டிகளில் சிறப்பாக விளையாடியுள்ள ஷ்ரேயாஸ் ஐயர் இந்தப் போட்டியில் இடம் பெறுவார் என்று தெரிகிறது.

78
உம்ரான் மாலிக்:

இதுவரையில் நடந்த இலங்கை, வங்கதேசம் மற்றும் நியூசிலாந்துக்கு இடையிலான போட்டிகளில் உம்ரான் மாலிக் சிறப்பாக பந்து வீசி அசத்தியுள்ளார். அதே போன்று 2023 உலகக் கோப்பை கிரிக்கெட்டிலும் சிறப்பாக பந்து வீசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், அதற்கு அவர் அணியில் இடம் பெற வேண்டுமே!

88
ஜஸ்ப்ரித் பும்ரா:

ஆசியா கோப்பை கிரிக்கெட் மற்றும் ஆஸ்திரேலியாவில் நடந்த ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் ஆகியவற்றிலிருந்து விலகிய பும்ரா இலங்கைக்கு எதிரான ஒரு நாள் தொடரில் இடம் பெற்றார். பின்னர், அதிரடியாக அவர் இலங்கை தொடரிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். மேலும், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடக்கும் டெஸ்ட் தொடர் மற்றும் உலகக் கோப்பை கிரிக்கெட் ஆகியவற்றை கருத்தில் கொண்டு அவர் அணியிலிருந்து நீக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories