ரோஹித் சர்மா கேப்டன்சிக்கே தகுதியில்லாத வீரர்..! கபில் தேவ் கடும் விமர்சனம்

First Published Jan 8, 2023, 5:49 PM IST

ரோஹித் சர்மா ஃபிட்னெஸ் அடிப்படையில் கேப்டன்சிக்கு தகுதியில்லாத வீரர் என்று கபில் தேவ் விமர்சித்துள்ளார்.
 

இந்திய அணியில் அண்மைக்காலத்தில் வீரர்களின் ஃபிட்னெஸ் பெரிய கேள்விக்குறியாக உள்ளது. விராட் கோலியின் கேப்டன்சியில் வீரர்களின் ஃபிட்னெஸை பரிசோதிக்க யோ யோ டெஸ்ட் முறை நடைமுறையில் இருந்தது. எவ்வளவு பெரிய வீரராக இருந்தாலும் யோ யோ டெஸ்ட்டில் தேறவில்லை என்றால் இந்திய அணியில் இடம்பெற முடியாது என்ற சூழல் இருந்தது. அந்தளவிற்கு விராட் கோலி ஃபிட்னெஸுக்கு முக்கியத்துவம் கொடுத்தார்.
 

ஆனால் ரோஹித் சர்மாவின் கேப்டன்சியில் யோ யோ டெஸ்ட் முறை நடைமுறையில் இல்லை. சீனியர் வீரர்கள் அடிக்கடி காயத்தால் வெளியேறியது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக இருந்தது. இப்போது மீண்டும் யோ யோ டெஸ்ட் அறிமுகப்படுத்தப்படுகிறது.
வைடு கொடுக்காத அம்பயரை கோபத்தில் கடுமையாக திட்டிய ஷகிப் அல் ஹசன்..! வைரல் வீடியோ

கேப்டன் ரோஹித் சர்மாவின் ஃபிட்னெஸே கேள்விக்குறியாக உள்ளது. கேப்டன் தான் அணி வீரர்களுக்கு அனைத்துவிதத்திலும் முன்மாதிரியாக இருக்கவேண்டும். அந்தவகையில், ஃபிட்னெஸை பொறுத்தமட்டில் ரோஹித் சர்மா, அணி வீரர்களுக்கு முன்னுதாரணமாக திகழவில்லை. அவரே ஃபிட்னெஸுடன் இல்லை என்று முன்னாள் கேப்டன் கபில் தேவ் கடுமையாக விமர்சித்துள்ளார். ரோஹித் சர்மா மிகத்திறமையான கிரிக்கெட் வீரர் என்றாலும், அவரது ஃபிட்னெஸ் சரியில்லை என்ற விமர்சனத்தை முன்வைத்துள்ளார் கபில் தேவ்.

AUS vs SA டெஸ்ட் தொடருக்கு பின் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியல்

இதுகுறித்து பேசியுள்ள கபில் தேவ், ரோஹித் சர்மாவின் ஃபிட்னெஸ் பெரிய கேள்விக்குறி. ஒரு கேப்டனாக ரோஹித் சர்மா, அவரது அணி வீரர்கள் அனைவரும் அவரை நினைத்து பெருமைப்படும் அளவிற்கு, வீரர்களை ஊக்குவிக்கும் அளவிற்கான முழு ஃபிட்னெஸுடன் இருக்கவேண்டும். ஆனால் ரோஹித் சர்மா அப்படியான ஃபிட்னெஸுடன் இல்லை. ரோஹித் சர்மா கேப்டனானதிலிருந்து பேட்டிங்கில் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. அவரது கிரிக்கெட்டிங் திறமை மீது எந்த சந்தேகமும் இல்லை. வெற்றிகரமான கிரிக்கெட்டர். அவர் ஃபிட்னெஸில் மட்டும் கவனம் செலுத்தினார் என்றால், மொத்த அணியும் அவருக்கு பின்னால், அவரைச்சுற்றி சிறப்பாக செயல்படும் என்று கபில் தேவ் தெரிவித்தார்.

click me!