சர்வதேச டி20 கிரிக்கெட்டில் சூர்யகுமார் யாதவ் வாரிக்குவித்த சாதனைகளின் பட்டியல்

Published : Jan 07, 2023, 11:34 PM IST

இலங்கைக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் சதமடித்த சூர்யகுமார் யாதவ் படைத்த சாதனைகளின் பட்டியலை பார்ப்போம்.

PREV
14
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் சூர்யகுமார் யாதவ் வாரிக்குவித்த சாதனைகளின் பட்டியல்

இந்தியா - இலங்கை இடையேயான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர் 2 போட்டிகளின் முடிவில் 1-1 என சமனடைந்த நிலையில், தொடரின் முடிவை தீர்மானிக்கும் கடைசி டி20 போட்டி இன்று நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் ஆடி 20 ஓவரில் 228 ரன்களை குவித்தது.

24

தொடரை வெல்ல வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கிய இந்திய அணிக்கு மேட்ச் வின்னிங் இன்னிங்ஸை ஆடிக்கொடுத்தார் சூர்யகுமார் யாதவ். அதிரடியாக பேட்டிங் ஆடி மைதானத்தின் அனைத்து திசைகளிலும் பந்தை பறக்கவிட்டு, சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தனது 3வது சதத்தை விளாசி 51 பந்தில் 7 பவுண்டரிகள் மற்றும் 9 சிக்ஸர்களுடன் 112 ரன்களை குவித்தார். அவரது அதிரடியால் 20 ஓவரில் 228 ரன்களை குவித்த இந்திய அணி, இலங்கையை 137 ரன்களுக்கு சுருட்டி 91 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 2-1 என தொடரை வென்றது.

இலங்கை பவுலிங்கை அடித்து வெளுத்து டி20யில் 3வது சதமடித்தார் சூர்யகுமார் யாதவ்..! இலங்கைக்கு மிகக்கடின இலக்கு
 

34

டி20 கிரிக்கெட்டில் 3வது சதத்தை அடித்ததுடன், 1500 ரன்கள் என்ற மைல்கல்லையும் எட்டினார். இந்த சதத்தின் மூலம் அவர் குவித்த சாதனைகளை பார்ப்போம்.
அர்ஷ்தீப் சிங் அருமையான பவுலிங்..! இலங்கையை சொற்ப ரன்களுக்கு பொட்டளம் கட்டி டி20 தொடரை வென்றது இந்தியா

44

சூர்யகுமார் யாதவின் சாதனைகள்:

1. 2023ம் ஆண்டு டி20 கிரிக்கெட்டில் முதல் சதமடித்த வீரர்.

2. சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 843 பந்தில் 1500 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டிய சூர்யகுமார் யாதவ், அதிவிரைவில் 1500 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டிய வீரர் என்ற சாதனையை படைத்தார்.

3. சூர்யகுமார் யாதவ் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 3வது சதத்தை விளாசி, டி20 கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த 2வது வீரர் என்ற சாதனையை படைத்தார். ரோஹித் சர்மா 4 சதங்களுடன் முதலிடத்தில் உள்ளார். 3 சதங்களுடன் சூர்யகுமார் யாதவ் 3 சதங்களுடன் 2வது இடத்தை சில வீரர்களுடன் பகிர்ந்துள்ளார். சூர்யகுமார் விரைவில் இந்த பட்டியலில் முதலிடத்தை பிடித்துவிடுவார். 

4. சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 43 இன்னிங்ஸ்களில் 3 சதங்கள் மற்றும் 14 அரைசதங்களை விளாசியுள்ளார்.
 

click me!

Recommended Stories