ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் 7500 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்த கோலி!

First Published | Apr 6, 2024, 9:07 PM IST

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான 19ஆவது ஐபிஎல் லீக் போட்டியில் விராட் கோலி 34 ரன்கள் எடுத்த போது ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் 7500 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார்.

Virat Kohli IPL Match

ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான 19ஆவது லீக் போட்டி நடைபெற்று வருகிறது.

Virat Kohli

இதில், டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சன் பவுலிங் தேர்வு செய்தார். இந்தப் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது பிங்க் நிற ஜெர்சியில் விளையாடுகிறது. இதையடுத்து விராட் கோலி மற்றும் பாப் டூ ப்ளெசிஸ் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.

Tap to resize

RR vs RCB, IPL 19th Match

இதில், 2ஆவது ஓவர் முதல் அதிரடியாக விளையாடிய விராட் கோலி 27 பந்துகளில் 34 ரன்கள் எடுத்ததன் மூலமாக ஐபிஎல் வரலாற்றில் 7500 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார். தற்போது 242 ஆவது இன்னிங்ஸில் விளையாடி வரும் கோலி, 7500 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

Virat Kohli 7500 IPL Runs

கோலியைத் தொடர்ந்து ஷிகர் தவான், 221 போட்டிகளில் 6755 ரன்களுடன் 2ஆவது இடத்தில் இருக்கிறார். தொடர்ந்து அதிரடி காட்டிய கோலி 39 பந்துகளில் அரைசதம் அடித்தார். இதில், 3 சிக்ஸர், 4 பவுண்டரி அடங்கும்.

Virat Kohli IPL Career

விராட் கோலி மட்டுமே அதிவேகமாக 6000, 6500, 7000 மற்றும் 7500 ரன்களை கடந்துள்ளார். கூடிய விரைவிலேயே 8000 ரன்களையும் கடப்பார் என்ற் எதிர்பார்க்கப்படுகிறது. 

Virat Kohli 7500 Runs

7500 ரன்களை கடந்து முதல் வீரராக சாதனை படைத்த நிலையில், முதல் வீரராக 100 ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார். 67 பந்துகளில் 100 ரன்கள் எடுத்து ஐபிஎல் கிரிக்கெட்டில் 8ஆவது வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

Latest Videos

click me!