சிஎஸ்கே அணிக்கு எதிராக நேற்று நடந்த 19ஆவது ஐபிஎல் லீக் போட்டியில் சிறப்பாக பேட்டிங் செய்து 37 ரன்கள் எடுத்த அபிஷேக் சர்மாவிற்கு அணி நிர்வாகம் செயினில் SRH மெடல் பரிசாக அளிக்கப்பட்டுள்ளது.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் தொடரின் 18ஆவது லீக் போட்டி நேற்று நடைபெற்றது. இதில், முதலில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் கேப்டன் பேட் கம்மின்ஸ் பவுலிங் தேர்வு செய்தார்.
212
Sunrisers Hyderabad
அதன்படி முதலில் பேட் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெடுகளை இழந்து 165 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஷிவம் துபே 45 ரன்களும், அஜிங்க்யா ரஹானே 35 ரன்களும் எடுத்தனர்.
312
Abhishek Sharma Family
பின்னர், 166 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பேட்டிங் செய்தது. இதில் இம்பேக்ட் பிளேயராக டிராவிஸ் ஹெட் களமிறங்கினார். போட்டியின் 2ஆவது ஓவரை சிஎஸ்கே அணியின் இம்பேக்ட் பிளேயர் முகேஷ் சவுத்ரி வீசினார். அந்த ஓவரில் மட்டும் அபிஷேக் சர்மா 4, 0, 6, 0, 6, நோபால் + 6, 6, 4 என்று மொத்தமாக 27 ரன்கள் குவித்தார்.
412
Telangana CM Revanth Reddy, Kavya Maran
3ஆவது ஓவரையும் எதிர்கொண்ட அபிஷேக் சர்மா, 6, 4 என்று அடித்த நிலையில் தீபக் சஹார் பந்தில் ரவீந்திர ஜடேஜாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அவர், 12 பந்துகளில் 4 சிக்ஸ், 3 பவுண்டரி உள்பட 37 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவர் அடித்த ஒவ்வொரு சிக்ஸருக்கும் நடிகர் வெங்கடேஷ் ஹைதராபாத் கொடியசைத்து ஆரவாரம் செய்தார்.
512
Actor Venkatesh
மேலும், ஹைதராபாத்தில் நடக்கும் போட்டி என்பதால் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி தனது குடும்பத்துடன் இணைந்து இந்தப் போட்டியை கண்டு ரசித்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. இதே போன்று தெலுங்கு காமெடி நடிகர் பிரம்மானந்தம் சிஎஸ்கே மற்றும் எஸ்.ஆர்.ஹெச் போட்டியை நேரில் வந்து கண்டு ரசித்துள்ளார்.
612
IPL 2024, SRH
டிராவிஸ் ஹெட் 31 ரன்களில் வெளியேற, எய்டன் மார்க்ரம் நிதானமாக விளையாடி ஐபிஎல் போட்டியில் அரைசதம் அடித்தார். அவர் 36 பந்துகளில் 4 பவுண்டரி, ஒரு சிக்ஸ் உள்பட 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஷாபாஸ் அகமது 18 ரன்னில் ஆட்டமிழந்தார். கடைசியில் ஹென்ரிச் கிளாசென் மற்றும் நிதிஷ் ரெட்டி இருவரும் இணைந்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றனர்.
712
Sunrisers Hyderabad
இறுதியாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 18.1 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 166 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலமாக புள்ளிப்பட்டியலில் 5ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இந்த போட்டியில் தோல்வி அடைந்த சென்னை சூப்பர் கிங்ஸ் புள்ளிப்பட்டியலில் 4ஆவது இடம் பிடித்துள்ளது.
812
SRH Medal Awad
இந்தப் போட்டியில் 308.33 ஸ்டிரைக் ரேட்டில் விளையாடி 37 ரன்கள் எடுத்துக் கொடுத்த அபிஷேக் சர்மா ஆட்டநாயகன் விருது வென்றார். தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, அபிஷேக் சர்மாவிற்கு ஆட்டநாயகன் விருது கொடுத்துள்ளார்.
912
Abhishek Sharma Man of The Match Award
முன்னாள் ஜாம்பவான்களான யுவராஜ் சிங், பிரையன் லாரா மற்றும் அபிஷேக்கின் தந்தை ஆகியோருக்கு நன்றி தெரிவித்துள்ளார். கிரிக்கெட் வாழ்க்கையில் ஆக்ரோஷமான பேட்ஸ்மேனான ஜாம்பவான் யுவராஜ் சிங், வழிகாட்டுதலையும் ஆதரவையும் வழங்கி, அபிஷேக்கிற்கு வழிகாட்டியாக பணியாற்றியுள்ளார்.
1012
Abhishek Sharma SRH Medal
இதேபோல், எல்லா காலத்திலும் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவரான லாரா, SRH அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த காலத்தில் அபிஷேக்கின் வளர்ச்சிக்கு முக்கிய பங்களித்தார். இந்த நிலையில் தான் போட்டிக்கு பிறகு அபிஷேக் சர்மா கூறியிருப்பதாவது: பவர்பிளேயில் சிறப்பாக விளையாடி ரன்கள் எடுத்தால் அதன் பிறகு சிறப்பாக விளையாட முடியும் என்பதை முடிவு செய்தோம்.
1112
Sunrisers Hyderabad
அதிக ரன்கள் குவிக்க வேண்டும் என்பது மனதில் இருந்தது. ஆனால், அதற்குள்ளாக அவுட்டாகிவிட்டேன். அதிரடியாக விளையாடியதற்காக யுவராஜ் சிங், பிரையன் லாரா மற்றும் எனது அப்பா ஆகியோருக்கு ஸ்பெஷலாக நன்றி என்றார்.
1212
SRH
இந்தப் போட்டிக்கு பிறகு டிரெஸிங் ரூமில் நடந்த பரிசளிப்பு விழாவின் போது அரைசதம் அடித்த மாயங்க் அகர்வால், கடைசியில் சிக்ஸர் அடித்த நிதிஷ் ரெட்டி, பீல்டிங்கில் சிறப்பாக செயல்பட்ட அப்துல் சமாத் ஆகியோர் உள்ளிட்ட பலருக்கு கேடயமும், பதக்கமும் பரிசாக வழங்கப்பட்டது.