சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் 2024 தொடரின் 17ஆவது சீசனில் விளையாடிய 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 2ஆவது இடத்தில் உள்ளது.
210
IPL 2024
இதில், 2 போட்டி ஹோம் மைதானத்தில் நடந்தது. ஒரு போட்டியில் மும்பை வான்கடே மைதானத்தில் நடந்தது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் 125 ரன்கள் மட்டுமே எடுத்தது.
310
Rajasthan Royals
பின்னர் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 15.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 127 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதே போன்று, பாப் டூப் ளெசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு விளையாடிய 4 போட்டிகளில் 3 போட்டிகளில் தோல்வியும், ஒரு போட்டியில் வெற்றியும் பெற்று புள்ளிப்பட்டியலில் 8ஆவது இடத்தில் உள்ளது.
410
Royal Challengers Bengaluru
இதில், ஹோம் மைதானத்தில் நடந்த 3 போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இந்த நிலையில் தான் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேல்சஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான 19ஆவது லீக் போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு ஜெய்பூரில் உள்ள சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது.
510
Sawai Mansingh Stadium
சவாய் மான்சிங் ஸ்டேடியம்:
இந்த மைதானத்தில் இதுவரையில் 54 போட்டிகள் நடந்துள்ளது. இதில், முதலில் பேட்டிங் செய்த அணி 20 போட்டியிலும், 2ஆவது பேட்டிங் செய்த அணி 34 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளன. மேலும், இந்த மைதானத்தில் எடுக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் 217/6, 20 ஓவர்கள் (ஆர் ஆர் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்).
610
RR vs RCB, 19th IPL 2024 Match
அதிகமாக சேஸ் செய்யப்பட்ட ரன்கள் 193/4, 19.2 ஓவர்கள் (டெல்லி மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ்). குறைந்தபட்ச ஸ்கோர் 59/10, 17.1 ஓவர்கள் (ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு).
710
RR vs RCB, IPL 19th Match
பேட்டிங்கிற்கு சாதகமாக இந்த மைதானத்தில் அதிக ரன்கள் குவிக்க வாய்ப்பிருக்கிறது. இதற்கு முன்னதாக இந்த சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் 2 போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில் 2 போட்டியிலும் முதலில் பேட்டிங் செய்து 193/4 ரன்கள் மற்றும் 185/5 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றிருக்கிறது.
810
Royal Challengers Bengaluru
ராஜஸ்தான் ராயல்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு:
இதுவரையில் இரு அணிகளும் நேருக்கு நேர் 30 போட்டிகளில் மோதியுள்ளன. இதில், 15 போட்டிகளில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், 12 போட்டிகளில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் வெற்றி பெற்றுள்ளன. மேலும், 3 போட்டிகளுக்கு முடிவு எட்டப்படவில்லை.