#PinkPromise: மாவு பிசைந்து, நீர் இறைத்து, கொத்தனார் வேலை செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர்கள்!

First Published | Apr 6, 2024, 8:20 PM IST

ராஜஸ்தான் மாநில பெண்களை கௌரவிக்கும் வகையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்கள் இன்றைய போட்டியில் பிங்க் நிற ஜெர்சி அணிந்து விளையாட இருக்கின்றனர்.

Pink Promise

ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடரின் 19ஆவது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டி தற்போது ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது.

Rajasthan Royals

இந்தப் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்கள் பிங்க் நிற ஜெர்சி அணிந்து விளையாடுகின்றனர். ராஜஸ்தான் மாநில பெண்களை கௌரவிக்கும் வகையிலும், அவர்களுக்கு மரியாதை அளிக்கும் வகையிலும் பிங்க் நிற ஜெர்சியில் விளையாடுகின்றனர்.

Tap to resize

Rajasthan Royals

ராஜஸ்தானில் உள்ள பெண்கள் மாற்றத்தை வழிநடத்துகிறார்கள் என்பதை பிரதிபலிக்கும் வகையில் இன்று நடந்த டாஸ் நிகழ்வின் போது சஞ்சு சாம்சனுக்கு சோலார் லைட் பரிசாக வழங்கப்பட்டது.

RR vs RCB, IPL 2024

இந்த நிலையில் தான் இன்றைய போட்டிக்கு முன்னதாக ராஜஸ்தானில் பல பகுதிகளுக்கு சென்ற ராஜஸ்தான் வீரர்கள் மக்களோடு மக்களாக இணைந்து செங்கல் வைத்து கட்டிடம் கட்டும் வேலையையும், மாவு பிசைவது, தண்ணீர் இறைத்தல், விதை நடவுதல், பானையில் தண்ணீர் கொண்டு வருவதல் என்று பல வேலைகளை செய்துள்ளனர். இது தொடபான வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.

Sanju Samson, RR vs RCB, Pink Promise

ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடரின் 17ஆவது சீசன் கடந்த மாதம் 22 ஆம் தேதி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இதுவரையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விளையாடிய 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 2 ஆவது இடத்தில் உள்ளது.

Sanju Samson

இதில், 2 போட்டி ஹோம் மைதானத்தில் நடந்தது. ஒரு போட்டியில் மும்பை வான்கடே மைதானத்தில் நடந்தது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் 125 ரன்கள் மட்டுமே எடுத்தது.

RR vs RCB 19th IPL 2024 Match

பின்னர் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 15.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 127 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதே போன்று, பாப் டூப் ளெசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு விளையாடிய 4 போட்டிகளில் 3 போட்டிகளில் தோல்வியும், ஒரு போட்டியில் வெற்றியும் பெற்று புள்ளிப்பட்டியலில் 8ஆவது இடத்தில் உள்ளது. இதில், ஹோம் மைதானத்தில் நடந்த 3 போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

Rajasthan Royals

இந்த நிலையில் தான் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேல்சஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான 19ஆவது லீக் போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு ஜெய்பூரில் உள்ள சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது.

Latest Videos

click me!