கேள்வி கேட்பது ரொம்ப ஈசி; ஆனால் கொஞ்சமாவது லாஜிக் இருக்கணும்..! அஷ்வின் பற்றிய கேள்வியால் கடுங்கோபமடைந்த கோலி

First Published Mar 12, 2021, 4:20 PM IST

அஷ்வினை ஏன் டி20 அணியில் எடுப்பதில்லை என்ற கேள்விக்கு தெளிவான விளக்கத்தை கொடுத்தார். ஆனால் அந்த கேள்வியால் செம கோபமடைந்த கோலி, கடுங்கோபத்துடனேயே பதிலளித்தார்.
 

இந்தியா - இங்கிலாந்து இடையேயான 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி இன்று அகமதாபாத்தில் நடக்கிறது. இரு அணிகளின் கேப்டன்களும் போட்டிக்கு முன் செய்தியாளர்களை சந்திப்பது வழக்கம். அந்தவகையில், செய்தியாளர்களை சந்தித்த இந்திய அணியின் கேப்டன் கோலியிடம், அஷ்வினை ஏன் டி20 அணியில் எடுக்கவில்லை என்று ஒரு நிருபர் கேள்வி கேட்டார்.
undefined
அந்த கேள்வியால் கடுங்கோபமடைந்தார் கோலி. ஆனாலும் அதற்கு தெளிவான விளக்கத்தை கொடுத்ததுடன், பதில் கேள்வியும் எழுப்பினார் கோலி.
undefined
அஷ்வினை ஏன் டி20 அணியில் எடுப்பதில்லை என்ற கேள்விக்கு பதிலளித்த கேப்டன் கோலி, வாஷிங்டன் சுந்தர் அருமையாக ஆடிவருகிறார். சுந்தரும் அஷ்வினும் ஒரே மாதிரியான வீரர்கள்(ஆஃப் ஸ்பின்னர்). சுந்தர் இந்திய அணிக்காக மிகச்சிறப்பாக ஆடிவருகிறார். அப்படியிருக்கையில் அஷ்வினை எப்படி சேர்ப்பது? ஒரே மாதிரியான 2 வீரர்களை எப்படி ஆட வைக்க முடியும்? சுந்தர் தொடர்ச்சியாக படுமோசமாக சொதப்பினால் மட்டுமே அதற்கு வாய்ப்பிருக்கிறது.
undefined
கேள்வி கேட்பது மிக எளிது. ஆனால் அதில் கொஞ்சமாவது லாஜிக் இருக்க வேண்டும். இப்போதைய இந்திய அணியில் அஷ்வினை எந்த இடத்தில் சேர்ப்பது என்று நீங்களே சொல்லுங்கள் என்று கோபமாக கொட்டித்தீர்த்தார் கோலி.
undefined
click me!