7 மேட்ச்சில் 4 சதங்கள்; 754 ரன்கள்..! வெறித்தனமான பேட்டிங்கால் சாதனைகளை வாரிக்குவித்த பிரித்வி ஷா

First Published Mar 11, 2021, 4:14 PM IST

விஜய் ஹசாரே தொடரின் அரையிறுதி போட்டியில் கர்நாடகாவுக்கு எதிராக 165 ரன்களை குவித்த பிரித்வி ஷா, மயன்க் அகர்வாலின் சாதனைகளை தகர்த்துள்ளார்.
 

கடந்த 2 ஆண்டுகளாகவே சர்வதேச கிரிக்கெட் மற்றும் ஐபிஎல் ஆகியவற்றில் சரியாக ஆடாமலோ அல்லது காயத்தால் எந்த தொடரிலும் முழுமையாக ஆடாமலோ இருந்துவந்த பிரித்வி ஷா, இந்திய டெஸ்ட் அணியில் தனக்கான இடத்தை மயன்க் அகர்வால் மற்றும் ஷுப்மன் கில்லிடம் இழந்தார். இந்நிலையில், நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் செம ஃபார்மில் ஆடி ரன்களை குவித்துவருகிறார் பிரித்வி ஷா.
undefined
நடப்பு விஜய் ஹசாரே தொடரில் செம ஃபார்மில் வெறித்தனமாக ஆடி போட்டிக்கு போட்டி சதம் விளாசி தெறிக்கவிடுகிறார். நடப்பு விஜய் ஹசாரே தொடரில் லீக் சுற்றில் ஒரு இரட்டை சதமும், ஒரு சதமும் அடித்த பிரித்வி ஷா, சவுராஷ்டிராவிற்கு எதிரான காலிறுதி போட்டியில், இலக்கை விரட்டும்போது 185 ரன்களை குவித்து மும்பை அணிக்கு வெற்றியை தேடிக்கொடுத்தார்.
undefined
அதன்மூலம், லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் சேஸிங்கில் அதிக ரன்களை குவித்த இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார் பிரித்வி ஷா. தோனி(183 vs இலங்கை - 2005), கோலி(183 vs பாகிஸ்தான் - 2012) ஆகிய இருவரின் சாதனையையும் தகர்த்து புதிய சாதனை படைத்தார் பிரித்வி ஷா.
undefined
இந்நிலையில், கர்நாடகாவுக்கு எதிராக நடந்துவரும் அரையிறுதி போட்டியில் 122 பந்தில் 165 ரன்களை குவித்துள்ளார். இதன்மூலம் நடப்பு விஜய் ஹசாரே தொடரில் 7 போட்டிகளில் ஆடி 188 என்ற சராசரி மற்றும் 4 சதங்களுடன் 754 ரன்களை குவித்துள்ளார்.
undefined
இதன்மூலம், விஜய் ஹசாரே தொடரின் ஒரு சீசனில் அதிக ரன்களை குவித்த வீரர்(754), அதிக சதங்களை விளாசிய வீரர்(4 சதங்கள்) என்ற சாதனையை படைத்துள்ளார் பிரித்வி ஷா. இதற்கு முன், 2018 விஜய் ஹசாரே தொடரில் மயன்க் அகர்வால் குவித்த 723 ரன்கள் தான் அதிகமான ஸ்கோராக இருந்தது. மேலும் அதே சீசனில் மயன்க் அடித்த 3 சதங்கள் தான் அதிக சதம் ஆகும். மயன்க் அகர்வாலின் அந்த 2 சாதனைகளையும் தகர்த்துவிட்டார் பிரித்வி ஷா.
undefined
click me!