IND vs BAN Test Series
இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வரும் 19 ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில் இந்திய வீரர்கள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது விராட் கோலிக்கு பந்து வீசிய பும்ரா 2 முறை அவரை ஆட்டமிழக்கச் செய்து தான் ஒரு சாம்பியன் பவுலர் என்று நிரூபித்துக் காட்டியிருக்கிறார்.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் வங்கதேச அணியானது 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் பங்கேற்கிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வரும் 19 ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது.
இதுவரையில் இந்தியாவிற்கு எதிராக ஒரு டெஸ்ட் போட்டியில் கூட ஜெயிக்காத வங்கதேசம் இந்த முறை வரலாற்று சாதனையை எதிர்நோக்கி இந்தியாவில் கால் பதிக்கிறது.
IND vs BAN 1st Test
இதற்கு முன்னதாக பாகிஸ்தான் சென்று அங்கு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்ற வங்கதேசம் 2-0 என்று வரலாற்று வெற்றியோடு முத்திரை பதித்து இப்போது இந்தியாவிற்குள் காலடி எடுத்து வைக்கிறது. ஆனால், இந்தியாவில் அவரது பாட்சா பலிக்காது.
ஏனென்றால், இதுவரையில் வங்கதேசத்திற்கு எதிராக இந்தியா விளையாடிய 13 டெஸ்ட் போட்டிகளில் 11 போட்டிகளில் இந்தியா வெற்றி வாகை சூடியிருக்கிறது. 2 போட்டி டிராவில் முடிந்திருக்கிறது. இதையெல்லாம் தாண்டி முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெறுவது என்பது இந்திய அணிக்கு ரொம்பவே முக்கியம்.
ஏனென்றால், இதுவரையில் இந்தியா 178 வெற்றி மற்றும் 178 தோல்வி என்று சரி சமமாக உள்ளது. சென்னை டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றால் தோல்வியை விட அதிக வெற்றிகளை பெற்ற 4ஆவது அணி என்ற சாதனையை இந்தியா படைக்கும்.
IND vs BAN Test
1932 ஆம் ஆண்டு முதல் இந்திய அணி விளையாடிய 579 டெஸ்ட் போட்டிகளில் 178 போட்டிகளில் வெற்றியும், 178 போட்டிகளில் தோல்வியும் அடைந்துள்ளது. அதோடு, 222 போட்டி டிராவில் முடிந்துள்ளது. வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி இந்திய அணிக்கு 580ஆவது டெஸ்ட் போட்டி. இதில், வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்னும் 5 வெற்றிகளைப் பெற்றால் டெஸ்ட் வரலாற்றில் 3வது வெற்றிகரமான கிரிக்கெட் அணியாக இந்தியா மாறும். தற்போது இந்திய அணி வீரர்கள் சேப்பாக்கம் மைதானத்தில் தீவிரமாக வலை பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதில், இந்திய பவுலர்கள் பேட்ஸ்மேன்களுக்கு பந்து வீசி வருகின்றனர்.
MA Chidambaram Stadium, IND vs BAN Test
அந்த வகையில் இந்திய அணியின் நட்சத்திர பந்து வீச்சாளரான ஜஸ்ப்ரித் பும்ரா, நட்சத்திர நாயகன் விராட் கோலிக்கு பந்து வீசியுள்ளார். அப்போது அவரது ஓவரில் மட்டுமே விராட் கோலி 2 முறை ஆட்டமிழந்துள்ளார். விராட் கோலியை ஆட்டமிழக்கச் செய்யும் அளவிற்கு பும்ரா பந்து வீசி அசத்தியிருக்கிறார்.
Virat Kohli and Jasprit Bumrah
இதற்கு முன்னதாக நேற்று நடைபெற்ற பயிற்சியின் போது விராட் கோலி அடித்த சிக்ஸர் ஒன்று சேப்பாக்கம் மைதானத்தின் சுவரையே உடைத்துள்ளது. இந்திய அணி வீரர்களின் டிரெஸிங் ரூமிற்கு அருகிலுள்ள சுவர் தான் விராட் கோலி அடித்த சிக்ஸரால் சேதமடைந்துள்ளது.