பின்பு ஹர்சித் ராணாவும், கோலியும் அதிரடியாக ரன்கள் சேர்த்ததால் நம்பிக்கை பிறந்தது. ஹர்சித் ராணா அதிரடியாக பவுண்டரியும், சிக்சருமாக நொறுக்கினார். சூப்பராக விளையாடிய ஹர்ஷித் 43 பந்துகளில் 52 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
மறுபக்கம் விராட் கோலி அட்டகாசமாக விளையாடி சர்வதேச கிரிக்கெட்டில் தனது 85வது சதம் விளாசினார். தனியொருவனாக போராடிய விராட் கோலி 108 பந்துகளில் 10 பவுண்டரிகள் மற்றும் மூன்று சிக்ஸர்களுடன் 124 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
நியூசிலாந்து அணி வரலாற்று சாதனை
இதன்பின்பு இந்தியாவின் நம்பிக்கை தகர்ந்தது. கடைசியில் சிராஜ் (0), குல்தீப் யாதவ் (5) விரைவில் அவுட் ஆனதால் இந்திய அணி 296 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இதன்மூலம் நியூசிலாந்து அணி 46 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்திய மண்ணில் முதல் ஓடிஐ தொடரை வென்று வரலாற்று சாதனை படைத்தது. இந்த போட்டியில் சதம் விளாசியதால் ஆட்டநாயகன் விருதையும், தொடரில் 2 சதத்துடன் 352 ரன்கள் குவித்ததால் தொடர் நாயகன் விருதையும் டேரில் மிச்செல் வென்றார்.