ரூ.1400 சம்பளத்திற்கு படத்துல நடிச்ச கிரிக்கெட் வீரர் யார் தெரியுமா? லப்பர் பந்துலயும் நடிச்சிருக்கலாம்?

First Published Oct 2, 2024, 1:24 PM IST

Varun Chakravarthy, Jeeva Movie 2014: வருண் சக்கரவர்த்தி, ஐபிஎல் தொடரில் கேகேஆர் அணிக்காக மிகச்சிறப்பாக விளையாடி வருகிறார். சினிமா ரசிகர்களுக்கு தெரியுமா? இவர் விஷ்ணு விஷாலின் ஜீவா படத்தில் நடித்திருக்கிறார் என்பது.

Jeeva Tamil Film, Varun Chakravarthy

பொதுவாக கிரிக்கெட் வீரர்கள் சினிமாவில் நடிப்பது, சினிமா நடிகர்கள் கிரிக்கெட் வீரர்களாக வருவதும் தற்போது இந்திய அணியில் நிகழ்ந்து வருகிறது. கிரிக்கெட் வீரர் சினிமாவில் நடிக்கலாம், ஆனால், சினிமாவில் நடித்து கிரிக்கெட் வீரராக வர முடியுமா? என்று கேட்டால் முடியும். அதற்கு உதாரணமாக இருப்பவர் தான் கர்நாடகாவை சேர்ந்த வருண் சக்கரவர்த்தி.

கடந்த 2021 ஆம் ஆண்டு இந்திய அணியில் இடம் பெற்று விளையாடி வருகிறார். ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மூலமாக இந்திய அணியில் இடம் பெற்றார். இலங்கைக்கு எதிரான டி20 போட்டியின் மூலமாக டி20 கிரிக்கெட்டில் அறிமுகமானார். ஆனால், இதுவரையில் ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமாகவில்லை.

Varun Chakravarthy - Indian Cricket Team

2019 ஆம் ஆண்டு பஞ்சாப் கிங்ஸ் அணியின் மூலமாக ஐபிஎல் தொடரில் அறிமுகம் செய்யப்பட்டார். அந்த சீசனில் பஞ்சாப் அணிக்காக ஒரேயொரு போட்டியில் மட்டுமே விளையாடினார். 3 ஓவர்கள் வீசி 35 ஒரு விக்கெட் எடுத்தார். இவரது திறமையைக் கண்டு வியந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 2020 ஆம் ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் ரூ.4 கோடிக்கு ஏலம் எடுத்தது.

கேகேஆர் அணியில் 2020 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் விளையாடிய வருண் சக்கரவர்த்தி 13 போட்டிகள் விளையாடி 52 ஓவர்கள் வீசி 17 விக்கெட்டுகள் கைப்பற்றினார். அதன் பிறகு 2021, 2022, 2023, 2024 ஆம் ஆண்டுகளில் கேகேஆர் அணியில் தக்க வைக்கப்பட்ட வருண் சக்கரவர்த்தி 18, 6, 20, 21 விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தினார்.

கடைசியாக நடைபெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் இடம் பெற்று விளையாடிய வருண் சக்கரவர்த்தி 15 போட்டிகளில் விளையாடி 21 விக்கெட்டுகள் கைப்பற்றினார். மேலும், கேகேஆர் டிராபி கைபற்ற வருண் சக்கரவர்த்தியும் ஒரு காரணமாக இருந்தார்.

Latest Videos


Varun Chakravarthy - Jeeva Tamil Cinema

இந்த நிலையில் தான் கிரிக்கெட்டில் அறிமுகமாவதற்கு முன்னதாகவே சினிமாவில் ஒரு படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார். அது என்ன படம், எவ்வளவு சம்பளம் என்று பார்த்தால் அது விஷ்ணு நடிப்பில் திரைக்கு வந்த ஜீவா படம். இந்தப் படத்தில் DCI Club Cricketer ஆக வருண் சக்கரவர்த்தி நடித்திருந்தார். இந்தப் படத்தில் ஒருநாளைக்கு ரூ.1400 சம்பளமாக பெற்றுள்ளார்.

கிரிக்கெட் தொடர்பான ஜீவா படத்தில் விஷ்ணு விஷால், ஸ்ரீ திவ்யா, சூரி, சுரபி, மதுசூதன் ராவ் ஆகியோர் பலர் நடித்திருந்தனர். அண்மையில் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் கிரிக்கெட் தொடர்பான கதையை மையப்படுத்தி வெளியான லப்பர் பந்து படத்திலும் வருண் சக்கரவர்த்திக்கும் ஒரு ரோல் கொடுத்திருக்கலாம். இது போன்று கிரிக்கெட் கதையை மையப்படுத்தி திரைக்கு வரும் படங்களில் கிரிக்கெட் வீரர்கள் நடித்தால் இன்னமும் நன்றாக இருக்கும் என்று ரசிகர்களான எங்களது எதிர்பார்ப்பு.

Varun Chakravarthy - Jeeva Movie

ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலம் ஓரிரு மாதங்களில் நடைபெற உள்ள நிலையில், இந்த ஏலத்திற்கு முன்னதாக நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சார்பில் வருண் சக்கரவர்த்தி ரூ.12 கோடிக்கு தக்க வைக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு முன்னதாக வங்கதேசத்திற்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணியில் வருண் சக்கரவர்த்தி இடம் பெற்றுள்ளார்.

இதற்கு முக்கிய காரணம், கேகேஆர் அணியில் கௌதம் காம்பீர் இருந்தது தான். வருண் சக்கரவர்த்தியும் கேகேஆர் அணி, கௌதம் காம்பீரும் கேகேஆர் அணி. இதுவரையில் டி20 தொடருக்கான இந்திய அணியில் வருண் சக்கரவர்த்தி இடம் பெற்றது கிடையாது.

Varun Chakravarthy - IPL 2025

கடைசியாக 2021 ஆம் ஆண்டு ஸ்காட்லாந்திற்கு எதிரான டி20 போட்டியில் இடம் பெற்று விளையாடினார். கிட்டத்தட்ட 3 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் டி20 தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற்றுள்ளார். ஆனால், பிளேயிங் 11ல் இடம் கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி வரும் 6ஆம் தேதி குவாலியரில் தொடங்குகிறது.

click me!