வைபவ் சூர்யவன்ஷிக்கு 'இந்த' பலவீனம் இருக்கு! உண்மையை போட்டுடைத்த இந்திய அணி கோச்!

Published : Jul 27, 2026, 11:52 AM IST

Vaibhav Suryavanshi: ஜிம்பாப்வே தொடரில் கலக்கிய 15 வயதான அதிரடி புயல் வைபவ் சூர்யவன்ஷி ஒரு விஷயத்தில் மட்டும் கண்டிப்பாக கவனம் செலுத்த வேண்டும் என்று இந்திய அணி தற்காலிக பயிற்சியாளர் விவிஎஸ் லட்சுமணன் தெரிவித்துள்ளார்.

PREV
14
ஜிம்பாப்வே தொடரில் கலக்கிய வைபவ் சூர்யவன்ஷி

இந்திய கிரிக்கெட்டின் இளம் புயல் வைபவ் சூர்யவன்ஷி, தனது ஃபிட்னஸை இன்னும் மேம்படுத்திக்கொண்டால், அவரால் மிகப்பெரிய உயரங்களைத் தொட முடியும் என்று இந்திய அணியின் தற்காலிக தலைமைப் பயிற்சியாளர் விவிஎஸ் லட்சுமணன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஜிம்பாப்வேக்கு எதிராக நடந்த தொடரில் சூர்யவன்ஷியின் ஆட்டம் எல்லோரையும் மிரள வைத்தது.

நேற்று ஹராரேவில் நடந்த கடைசி டி20 போட்டியில், வெறும் 49 பந்துகளில் 81 ரன்கள் விளாசி, இந்தியாவின் 35 ரன் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார்.இந்தத் தொடரில் 3 போட்டிகளில் 151 ரன்கள் குவித்து, தொடரின் அதிகபட்ச ரன் எடுத்த வீரர் என்ற பெருமையையும் பெற்றார். இதற்காக, தனது முதல் 'தொடர் நாயகன்' விருதையும் வென்றார். இந்த வருடம் நடந்த ஐசிசி U-19 உலகக் கோப்பையிலும் இவரது ஆட்டம் சிறப்பாக இருந்தது. 15 வயதே ஆன இந்த இடது கை பேட்ஸ்மேனின் அதிரடி ஆட்டம், அவரது எதிர்காலத்தைக் காட்டுவதாக அமைந்துள்ளது.

24
வைபவ் சூர்யவன்ஷியின் பலவீனம் இதுதான்

சூர்யவன்ஷியின் பேட்டிங் திறமையால் கிரிக்கெட் உலகம் வியந்து நிற்கும் நிலையில், அவர் தனது பயணத்தில் தொடர்ந்து முன்னேற வேண்டுமென்றால் ஒரு முக்கியமான விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும் என இந்திய அணியின் தற்காலிக பயிற்சியாளர் விவிஎஸ் லட்சுமணன் சுட்டிக்காட்டியுள்ளார்."அவர் மேம்படுத்திக்கொள்ள வேண்டிய ஒரே ஒரு விஷயம், அவருடைய ஒட்டுமொத்த ஃபிட்னஸ்தான்" என்று லட்சுமணன் ஐசிசி இணையதளத்தில் கூறியுள்ளார்.

"அவர் ரொம்ப சின்னப் பையன். ஆட்டத்தின் எல்லா அம்சங்களிலும் தன்னை மெருகேற்றிக்கொள்ள அவர் விரும்புகிறார். இன்றைக்குக்கூட, ஃபீல்டிங் செய்யும்போது டைவ் அடித்து கேட்ச் பிடிக்க முயன்றதில் காயம் அடைந்த பிறகும், களத்தை விட்டு வெளியேற அவர் விரும்பவில்லை. எங்க பிசியோதான் அவரை வெளியே வரச் சொன்னார். அணிக்கு தன்னால் முடிந்த எல்லா வழிகளிலும் பங்களிக்க வேண்டும் என்ற ஆர்வம் அவரிடம் இருக்கிறது" என்றும் லட்சுமணன் தெரிவித்தார்.

34
அழுத்தம் இல்லாமல் விளையாடுகிறார்

தொடர்ந்து பேசிய அவர், "கடந்த ஆண்டு அவர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக முதல்முறை விளையாடியபோதே, அவர் அழுத்தத்தை கையாண்ட விதம் சிறப்பாக இருந்தது. எந்த ஒரு ஐபிஎல் போட்டியும் ஒரு சர்வதேச போட்டிக்கு சமமானது என்பது என் கருத்து. 14 அல்லது 15 வயதில் ஐபிஎல் போன்ற பெரிய தொடரில் விளையாடும்போது, அந்த சூழலைக் கண்டு மிரண்டு போகலாம் அல்லது அந்த அழுத்தத்தை ஏற்றுக்கொண்டு விளையாடலாம். அவர் இரண்டாவது வழியைத் தேர்ந்தெடுத்தார்" என்று கூறினார்.

44
அனைத்து சாதனைகளையும் முறியடிப்பார்

மேலும் "இந்த தொடரில் அவர் இப்படி விளையாடியதில் எனக்கு ஆச்சரியம் இல்லை. சதம் அடிக்க முடியவில்லையே என்று அவர் ஏமாற்றமடைந்தார், ஆனால் இது முதல் வாய்ப்பும் இல்லை, கடைசி வாய்ப்பும் இல்லை என்று நாங்கள் அவரிடம் சொன்னோம். அவருக்கு ஒரு நீண்ட கிரிக்கெட் வாழ்க்கை இருக்கிறது. ஒவ்வொரு நாளும் தன்னை மேம்படுத்திக்கொள்ளும் மனப்பான்மையும், திறமையும் அவரிடம் உள்ளது. அவர் நிச்சயம் முன்னேறி, சர்வதேச அளவில் எல்லா சாதனைகளையும் முறியடிப்பார் என்று நான் நம்புகிறேன். அதற்கான எல்லா தகுதியும், திறமையும் அவரிடம் இருக்கிறது" என்றும் லட்சுமணன் நம்பிக்கை தெரிவித்தார்.

வைபவ் சூர்யவன்ஷியின் இந்த அபார வளர்ச்சிக்குப் பின்னால் லட்சுமணனுக்கு முக்கிய பங்கு உண்டு. இந்த ஆண்டு இந்தியா கோப்பையை வென்ற U-19 உலகக் கோப்பை அணிக்கு அவர் தான் தலைமைப் பொறுப்பில் இருந்தார். அப்போது, அந்தத் தொடரில் 439 ரன்கள் குவித்து, தொடர் நாயகன் விருதையும் சூர்யவன்ஷி வென்றது குறிப்பிடத்தக்கது.

Read more Photos on
click me!

Recommended Stories