Vaibhav Sooryavanshi: 15 வயதில் உலக சாதனை! பொல்லார்டையே மிஞ்சிய வைபவ்.. டி20 கிரிக்கெட்டில் புதிய வரலாறு!

Published : May 13, 2026, 04:19 PM IST

Vaibhav Sooryavanshi: ஐபிஎல் தொடரில் தனது அதிரடி ஆட்டத்தால் ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் திரும்பி பார்க்க வைத்துள்ள 15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷ டி20 கிரிக்கெட்டில் யாரும் செய்யாத சாதனையை செய்து அசத்தியுள்ளார். 

PREV
15
15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி சாதனை

ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் வைபவ் சூர்யவன்ஷி ஐபிஎல் தொடரில் முன்னணி பந்துவீச்சாளர்களுக்கு எதிராக பவுண்டரிகளையும் சிக்ஸர்களையும் பறக்க விடுவது மட்டுமல்லாமல் பல்வேறு சாதனைகளை குவித்து வருகிறார். ஏற்கனவே அதிவேக சதம், அரைசதம் என சாதனை செய்துள்ள வைபவின் பேட்டிங்கை ஜாம்பவான்கள் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில், 15 வயது இளம் வீரர் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

25
டி20 100 சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற சாதனை

ஐபிஎல் தொடரில் சிக்ஸர் மழை பொழியும் வைபவ் சூர்யவன்ஷி, 20 வயதுக்கு முன்பாகவே டி20 போட்டிகளில் அதிவேகமாக 100 சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். 20 வயதுக்குட்பட்டோரில், மிகக் குறைந்த பந்துகளில் 100 டி20 சிக்ஸர்கள் அடித்த சாதனை தற்போது வைபவ் சூர்யவன்ஷி பெயரில் பதிவாகியுள்ளது.

35
வைபவ் ஜாம்பவான்களின் சாதனையை முறியடித்தார்

டி20 கிரிக்கெட்டில் மிகக் குறைந்த பந்துகளில் 100 சிக்ஸர்களை அடித்த வீரர் என்ற சாதனையை வைபவ் சூர்யவன்ஷி படைத்துள்ளார். இதன் மூலம், வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் வீரர் கீரன் பொல்லார்டின் சாதனையை அவர் முறியடித்துள்ளார். வைபவ் 514 பந்துகளில் 100 சிக்ஸர்களை எட்ட, பொல்லார்ட் இந்த சாதனையை 843 பந்துகளில் செய்திருந்தார். பல ஆண்டுகளாக நீடித்த பொல்லார்டின் சாதனையை வைபவ் தகர்த்துள்ளார்.

45
முகமது சிராஜ் வீசிய முதல் பந்து சிக்ஸர்

குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக வெறும் 16 பந்துகளில் 36 ரன்கள் அடித்து இந்த சாதனையை அவர் நிகழ்த்தியுள்ளார். இந்த போட்டியில் வைபவ் 3 சிக்ஸர்கள் மற்றும் 3 பவுண்டரிகளை பறக்கவிட்டார். முகமது சிராஜ் வீசிய முதல் பந்தையே சிக்ஸருக்குப் பறக்கவிட்டு தனது அதிரடியை தொடங்கினார். தற்போது வைபவின் இந்த சாதனைக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

55
ஐபிஎல் இன்னிங்ஸில் சாதனை சிக்ஸர்

ஒரு ஐபிஎல் இன்னிங்ஸில் 12 சிக்ஸர்களை விளாசி, அதிக சிக்ஸர்கள் அடித்த சாதனையை வைபவ் சூர்யவன்ஷி படைத்திருந்தார். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக வைபவ் இந்த சாதனையை செய்தார். அதே போட்டியில், வெறும் 37 பந்துகளில் 103 ரன்கள் குவித்து அசத்தினார்.

Read more Photos on
click me!

Recommended Stories